பக்கம்:பெரும்பாணாற்றுப்படை-விளக்கவுரை.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா, கோவிந்தனார் 87.

தோற்றம் அளிக்கும். மூங்கில் மிலார் கொண்டு பின்னப்பட்ட பட்லால் அது மூடப்பட்டிருக்கும். ஆட்டு மந்தையோடு. சென்று தங்கும் இடங்களில், குட்டிகளை இட்டு மூடி வைப்ப தற்காகச் செல்லும் இடந்தோறும் உடன் கொண்டு செல் வதற்காகக், கழிகள் கொண்டு கட்டி, கற்றை கற்றையாக வைக்கோல் வேயப்பட்டு சிறுகுடில் போல் காட்சி தரும் கூண்டு ஒரு பால் கிடக்கும். ஆயர் குடிலையும் ஆயர். உடைமையாம் ஆட்டு நிரையையும் காக்கும் கடமை பூண் டவன் இருக்கவும் துஞ்சவும் உதவும் தோலால் ஆன விரிப்பு ஒருபால் சுருட்டி வைக்கப்பட்டிருக்கும். பகலில், புனத்தில், மேயும் போது, ஆட்டுக்கிட்ாய் ஆட்டு மந்தையொடு கலந்து மேய விடப்படும் என்றாலும், இரவில் கிடாக்களை, மந்தையி விருந்து பிரித்து, நீண்ட கயிற்றில் வரிசையாக இணைக்கப் பட்டிருக்கும் தாம்புகளில் பிணித்து விடுவர். தாமணி என அழைக்கப்படும் அத்தாம்பின் இரு முனைகளையும், இரு பக்கத்திலும் ஈர்த்துக் கட்டுவதற்காக நடப்பட்டிருக்கும். கட்டுத்தறிகள் ஒருபால் காட்சி அளிக்கும். கிடாய் நீங்கிய செம்மறியாடுகளையும், வெள்ளாடுகளையும் அடைத்து வைக்க, முள்கொண்டு வேலி அமைத்து ஆக்கிய அடைப்பும், ஆடுகள் கழித்த எருக்குப்பையும் அடுத்தடுத்து இடம் பெற். றிருக்கும். - . -

ஆயர் மகளிர், இருள்புலரும் விடியற்காலத்தில், காக மும், கோழியும் துயில் எழுப்ப எழுந்து, தயிர் கடையத்’ தொட்ங்கி விடுவர். மழைகாலத்தில் ஆங்காங்கே முளைத் திருக்கும் குடைக்காளான்போலும் வடிவமும், தூய வெண் ணிறமும் வாய்ந்த குமிழ்கள் இடையிடையே தோன்றுமளவு இறுகத் தேர்ய்ந்து இன்சுவை மிகுந்த தயிர் உள்ள பள்னை புள், மத்திட்டு, மத்தில் சுற்றிய கயிற்றின் இருமுனை களையும் பற்றி மாறி மாறி வலிப்பர். தயிர் கடையும் போது எழும் ஒலி புலி முழக்கத்தை நினைவூட்டுவதாய் இருக்கும். அவ்வாறு கடைந்து, திரண்டு எழும் வெண்ணையை வேறு.