பக்கம்:பெரும்பாணாற்றுப்படை-விளக்கவுரை.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88. பெரும்பாணாற்றுப்படை விளக்கவுரை

படுத்தி அகற்றிய மோரை, கடையும் போது தெரித்த மோர், மேற்புறமெல்லாம் புள்ளி புள்ளியாகக் காட்சி தரும் பானை யுள் நிறைத்துக் கொண்டு, பானையைத் தலையில் மெத் தென்ற சுமட்டின் மீது வைத்துக்கொண்டு, காலையிலேயே

மோர் விற்கச் சென்று விடுவர். திறம் கறுப்புதான் எனினும் அக்கறுப்பினும் அழகு மிளிரும் மேனியராகிய ஆங் மகளிர் கூந்தலை ஆற்றறல் போல், வனப்புற வாரி முடித்து, காதில் அணித்திருக்கும் தாளுருவி எனும் அணி,நடைக்கு ஏற்ப, ஆடி

அசையுமாறு, மூங்கில் போலும் வடிவும் வனப்பும் வாய்ந்த

தோள்களை வீசி வீசி விரைந்து நடந்து மோர் விற்று

முடிப்பர்.

மோர் விற்பனையால் கிடைக்கும் சிறுதொகை கொண்டு தம்வீட்டார் வாழ்வாங்கு வாழ்வதற்குத் தேவைப்படும் பொருள்களைக் குறைவற வாங்கிக் கொண்டு, நெய் விற்பனையால் பெருந்தொகை கிடைத்த போது, அது கொண்டு பெண்கள் இயல்பாக விரும்பும் பொன் அணிகள் வாங்கிவிட எண்ணாது, தம் குடும்பவருவாய் பெருகத்துணை புரியும், கன்று ஈன்ற எருமையையும், கன்று ஈன்ற பசுவையும் வாங்கிக் கொண்டு வீடு வந்து சேர்வர். மனைவியர், இவ்வாறு மனைத்தக்க மாண்புடையவராகவும், வளத்தக்க வாழ்வுடையவராகவும் வாய்த்து விடுவதால், ஆயரும் மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதந்து போவார். அவ்வக மகிழ்ச்சி வாய் மடித்து எழுப்பும் சீழ்க்கை ஒலியாக வெளிப்பட்டு வழியும். - * . . . . . . . . . . . . . . .

இத்தகைய ஆயர் பாடியுள் புகுந்து விட்டால், அவர்கள். உங்களைத் தங்கள் மனையிலே இருத்தி, குறிஞ்சி நிலத் தில் மோர் விற்று, அதற்கு விலையாக பெற்றுவந்த தினை பரிசியாலான சோற்றை, இனிய பாலோடு கலந்து படைப்ப்ர் உண்டு மகிழ்வீராக என்றார். - * -