பக்கம்:பெரும் பெயர் முருகன்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92.

60.

65.

70.

75.

பெரும் பெயர் முருகன்

திகழ்பொறிப் பீலி அணிமயில் கொடுத்தோன்; திருந்துகோல் ஞமன்தன் மெய்யிற் பிரிவித்து

இருங்கண் வெள்யாட்டு எழில்மறி கொடுத்தோன்;

ஆஅங்கு-அவரும் பிறரும் அமர்ந்துபடை அளித்த மறியும் மஞ்ஞையும் வாரணச் சேவலும் பொறிவரிச் சாபமும் மானும் வாளும் செறிஇலை ஈட்டியும் குடாரியும் கணிச்சியும் தெறுகதிர்க் கனலியும் மாலையும் மணியும் வேறுவேறு உருவின் இவ்வாறிரு கைக்கொண்டு மறுவில் துறக்கத்து அமரர் செல்வன்தன் . பொறிவரிக் கொட்டையொடு புகழ்வரம்பு

- இகந்தோய்! நின்குணம் எதிர்கொண்டோர்

அறங்கொண்டோர் அல்லதை,

மன்குணம் உடையோர்

மாதவர் வணங்கியோர் அல்லதை, செறுதி நெஞ்சத்துச் சிளம்நீடி னேரும் சேரா அறத்துச் சீரி லோரும் அழிதவப் படிவத்து அயரியோரும்

மறுபிறப்பு இல்லெனும் மடவோரும் சேரார்

நின்நிழல்; அன்னேர் அல்லது இன்னேர்

சேர்வார்; ஆதலின், யாஅம் இரப்பவை

80.

பொருளும் பொன்னும் போகமும் அல்ல, நின்பால்

அருளும் அன்பும் அறனும் மூன்றும், உருள் இணர்க் கடம்பின் ஒலிதா ரோயே

கடவுள் வாழ்த்து. கடுவன் இளவெயினனுர் பாட்டு.

கண்ணன் நாகனுர் இசை. பண்ணுப் பாலையாழ்.