பக்கம்:பெரும் பெயர் முருகன்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எது சரி?

- முருகக் கடவுளேப் பாடிய புலவர்களில் பலரை நாம் மறந்து விட்டோம். அதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று: அவர்கள் பாடிய பாடல்கள் தமிழ்நாட்டில் தொடர்ந்து வழங்கவில்லை. இடைக்காலத்தில் அவர்கள் பாடிய பாடல்களைக் கவனிப்பாரே இல்லாமற் போயினர். கடைச்சங்க காலத்து நூல்களாகிய பத்துப்பாட்டு, எட்டுத் தொகை என்பவற்றில் அப் பாடல்கள் உள்ளன. அவர் றைப் படியாமல் பாடஞ்சொல்லாமல் இடையிலே சில காலம் தூங்கிக் கொண்டிருந்தார்கள். இறைவன் திருவரு ளால் மகாமகோபாத்தியாய டாக்டர் ஐயரவர்கள் தோன்றிச் சங்க நூல்களே மீட்டும் உருவாக்கித் தமிழுலகத்துக்கு வழங்கினர்கள். அவர்களுடைய பெரு முயற்சியால் அந்தப் பழம் பாடல்களைத் தமிழ்நாடு முழுவதும் இன்று படித்து இன்புறுகிறது.

அந்தப் பாடல்களின் நடைக்கும் பிற்காலக் கவிகளின் நடைக்கும் மிக்க வேறுபாடு உண்டு. மரபு தெரியாமல் பழக்கம் இல்லாமல் படிக்கத் தொடங்கினல் அவை மயக் கத்தை உண்டாக்கும். அதல்ை அவற்றை யாவரும் படித் துப் பாராட்ட இயலாமற் போயிற்று.

இரண்டாவது காரணம்: முருகனது புகழை அமுத தாரை போன்ற கவித்துவத்தைப் பெற்ற அருணகிரிநாதர் மிக விரிவாகப் பாடியருளினர். அவருடைய சரளமான வாக்கில் ஈடுபட்ட பிறகு, கடினமான பிற பாடல்களே. ஆராய எல்லோருக்கும் உள்ளம் செல்வதில்லை. அப் படியே எடுத்து விழுங்கும் அல்வா எளிதிலே கிடைக்கும்