பக்கம்:பெரும் பெயர் முருகன்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 - பெரும் பெயர் முருகன்

போது, பல்லே உடைக்கும் பொரிவிளங்காய் உருண்டை யைக் கடித்துக் கொண்டிருக்க விரும்புபவர் யார்? -

ஆயினும், முருகனுடைய பெருமையையும், தமிழ் நாட்டார் பண்டைப் பழங்கால முதலே அப்பெருமான வழிபட்டு வரும் சிறப்பையும், அவர்கள் வழிபட்டு வந்த முறைகளேயும் நன்ருக உணரவேண்டுமானல், அந்தப் பமும் பாடல்களைப் படித்துத் தெளியவேண்டும். முருகனத் தமிழ்த் தெய்வமென்று கொண்டாடுகின்ருேம். ஏன் அப் படிச் சொல்லவேண்டும்? மற்ற நாட்டினருக்கெல்லாம் அவன் தெய்வம் அல்லவா? இத்தகைய கேள்விக்குத் தக்க விடைகள் வேண்டுமாயின், அந்தப் பழைய நூல்களில் 'உள்ள செய்திகளே ஆராயவேண்டும். - . . . . .

திருமுருகாற்றுப் படை இன்றும் முருகன் அடியார் களால் பாராயணம் செய்யப்பெற்று வருகின்றது. பழைய பாடல்களில் அது ஒன்றுதான் நடுவில் மறைந்து போகா மல் தமிழ் நாட்டில் உலாவி வருகின்றது. சங்க நூல்கள் அத்தனையும் மறைந்து போயிருந்தாலும், திருமுருகாற்றுப் படை ஒன்று மாத்திரம் கின்றிருக்கும். பனையேட்டில் எழு தியதோடு கில்லாமல், பக்தர்கள் அதனைத் தங்கள் மன ஏட்டில் எழுதிப் பாராயணம் செய்து பாதுகாத்து வந்தார். கள். முருகனுடைய சிறப்பை மிக விரிவாகச் சொல்லும் இயல்பினல் அந்த நூல் மறையாமல் மங்காமல் கின்று ஒளிர்கிறது. அந்த நூலை இயற்றிய சிறப்பினல், நக்கீரரை யும் தமிழுலகம் மறக்கவில்லை. அருணகிரிநாதர் மிக அருமை யாக அப்பெரும் புலவரைப் பாராட்டியிருக்கிருர். . இத்தகைய சிறப்புப் பெற்ற திருமுருகாற்றுப்படையும் எளிதில் விளங்கும் நூலாகப் பலருக்குத் தோன்றவில்லை. அதுவும் பண்டைப் பழைய நூல்களில் ஒன்ருக இருப்பது தான் காரணம். இக்காலத்தில் வழங்காத பல சொற்கள் அந்நூலில் உள்ளன. இக்காலத்தில் வழங்காத வழக்கங்