பக்கம்:பெரும் பெயர் முருகன்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எது சரி ? - 95

களே அதில் காணலாம். இக்காலத்தினருக்கு முரண்பாடா கத் தோற்றும் சில செய்திகளைக்கூட அதில் காணலாம்.

காலந்தோறும் மனிதனுடைய பேச்சில் சில மாற்றங் கள் உண்டாகின்றன; செய்கையில் சிறு வேறுபாடுகள் அமைகின்றன; எண்ணங்களிலும் கொள்கைகளிலும் சில மாறுபாடுகளேப் பார்க்கலாம். இந்த வேறுபாடுகளைப் பண்டை நூல்களைப் படித்து உணரலாம். முருக வழிபாட் டிலும், முருகனைப் பற்றிய வரலாறுகளிலும் இப்படியே சில வேறுபாடுகள் இருப்பதைக் காணலாம். -

திருமுருகாற்றுப்படையில் உள்ள சில செய்திகள் பிற் காலத்து நூல்களால் விளங்கா. நக்கீரர் காலத்திலும் அதற்கு முற்பட்ட காலத்திலும் எழுந்த நூல்களைக் கொண்டே அச் செய்திகளேத் தெளிந்து கொள்ளவேண் டும். பரிபாடலில் உள்ள முருகனைப் பற்றிய பாடல்களும், பிற சங்கநூலில் வரும் பாடல்களும் இந்த விளக்கத்தைப் பெற உதவும். ஆகவே அந்தப் பாடல்களின் கருத்தைத் தெரிந்து கொள்வதனால் நம்முடைய கொள்கையை மாற் றிக்கொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லை. பழைய வழக்கமே மீண்டும் வரவேண்டும் என்ற வற்புறுத்தலும் இல்லை. சங்க காலத்துக்குப்பின் எழுந்த நூல்களில் கூட இந்த வேறுபாடுகளைக் காணலாம். -

ஒரு சிறிய உதாரணத்தைப் பார்க்கலாம். திருஞான சம்பந்தமூர்த்தி நாயனர் முருகனுடைய திரு அவதாரம்

என்பது ஒரு சாரார் கொள்கை; சேக்கிழார் காலத்தில்

வாழ்ந்த ஒட்டக்கூத்தர், திருஞான சம்பந்தரை முருக வேளின் அவதாரமாகவே சொல்கிருர்.

அவர் இயற்றிய தக்கயாகப் பரணி என்னும் நூலில் திருஞான சம்பந்தர் சமணர்களே வாதில் வென்ற கதை வருகிறது. தேவி அந்தக் கதையைச் சொல்லும்படி ஏவி,