பக்கம்:பெரும் பெயர் முருகன்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 பெரும் பெயர் முருகன் .

கலைமகள் கதையைச் சொல்கிருள். தேவி ஏவுவதாக உள்ள பாட்டு வருமாறு:

வருகதை, தெய்வமகளென் மருமகள் வள்ளிவதுவை மனமகிழ் பிள்ளைமுருகன் மதுரையில் வெல்லும் இனிய தொருகதை சொல்லு, தவள ஒளிவிரி செவ்விமுளரி ஒளிதிகழ் அல்லி கமழும் ஒருமனை வல்லி எனவே.

வெள்ளிய ஒளி விரிகின்ற செவ்வியை யுடைய தாமரையின் அகவிதழ் மணம் வீசுகின்ற இடத்தையே மனையாகக் கொண்ட கலைமகளே, நீ இப்போது ஒரு கதை யைச் சொல்வாயாக, தெய்வப் பெண்ணும் எனக்கு மரு. மகளுமாகிய வள்ளியை மணம்செய்து மனமகிழ்ந்த பிள்கள் யாகிய முருகன் மதுரையில் வெற்றி பெற்ற அந்த இனிய கதையைச் சொல் என்று தேவி கேட்கிருள். -

இங்கே தெளிவாக, முருகன் மதுரையில் வெல்லும் இனியதொரு கதை’ என்று ஞானசம்பந்தரை முருகனுகவே. அம்பிகை சொல்கிருள். . .

பிற்காலத்தில் வந்த பல புலவர்கள் ஞானசம்பந்தரை முருகன் திருவவதாரமாகவே பாடுகின்ருர்கள். அருண் கிரிநாதர் பல இடங்களில் ஞானசம்பந்தர் முருகன் திருவவதாரம் என்பதைப் பலவகையிலே சொல்லுகிருர்,

ஆனல் சேக்கிழார் பெரிய புராணத்தில் முருக லுடைய திருவவதாரமே ஆளுடைய பிள்ளையார் என்று கூறவில்லை. சுந்தரமூர்த்தி நாயனர் ஆலால சுந்தரரின் திருவவதாரம் என்று பாடிய அவர் சம்பந்தப் பெருமான முருகன் திருவவதார மென்று சொல்லவில்லை. அப்பெருமான் உமாதேவியாருடைய திருமுலைப்பால் உண்டமையாலும், இறைவனைச் சற்புத்திர மார்க்கத்தில் வழிபட்டமையாலும் ஆளுடைய பிள்ளையார் என்ற