பக்கம்:பெரும் பெயர் முருகன்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எது சரி ? 97

திருநாமம் பெற்ருர். பிள்ளையார், ஆளுடைய பிள்ளையார், இறைவர் திருமகளுர் என்று வரும் இடங்களில் எல்லாம் முருகன் அவதாரம் என்று கொள்வார் சிலர். அது சேக்கிழார் கொள்கை அன்று. அவ்வாரு யின் வெளிப் படையாகவே அவர் எங்கேனும் ஓரிடத்தில் சொல்லி யிருப்பார்.

சேக்கிழாருக்கு முன் திருஞானசம்பந்த மூர்த்தி சுவாமிகளைப் பாடினவர் நம்பியாண்டார் நம்பி. சுந்தர மூர்த்தி சுவாமிகள் பாடிய திருத்தொண்டத் தொகையைச் சற்று விரித்துத் திருத்தொண்டர் திருவந்தாதி பாடியவர் அப்பெரியார். சேக்கிழார் தம்முடைய பெரிய புராணத் துக்கு மூலமாகத் திருத்தொண்டத் தொகையையும், திருத்தொண்டர் திருவந்தாதியையும் வைத்துக் கொண்டார்.

கம்பியாண்டார் நம்பி பாடிய ஆளுடைய பிள்ளே யார் திருக்கலம்பகம் என்னும் நூலில் ஒரு பாட்டு வருகிறது. அங்கே சம்பந்தப்பெருமான் முருகவேளுடைய அவதாரம் என்று கினைப்பதற்குரிய குறிப்பு ஒன்று இருக்கிறது. பாட்டு அகத்துறையில் அமைந்தது. தோழி தலைவனைப் பார்த்துச் சொல்கிருள். அயலா ரெல்லாம் நின் காதலியை மணம் பேசுவதற்காக வரப் போகிரு.ர்கள். அதற்கு முன் நீ இவளே மணந்து கொள்ளவோ, அழைத்துச் செல்லவோ வேண்டும்’ என்று அறிவுறுத்துத்துகிருள்.

சரதம், மணமலி பரிசம் ೧೮೧೯T.

தளர்வில் புகலியர் அதிபன், நதிதரு வரதன், அணிதமிழ் விரகன், மிகுபுகழ்

- மருவு சுருதிநன் மலையின் அமர்தரு பெரும்-7