பக்கம்:பெரும் பெயர் முருகன்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 பெரும் பெயர் முருகன்

விரதம் உடையை நின் இடையி னவள் மனம்

விரைசெய் குழலியை அணைவ தளிதென

இரதம் அழிதர வருதல் முனம்இனி

எளிய தொருவகை கருது மலையனே

என்பது 23-ஆவது பாட்டு. தலைவனப்பற்றிக் சொல்கையில், '.ே ஞானசம்பந்தப் பெருமானுக்குரிய சுருதி மலையில் தங்குகின்ற விரதம் உடையாய்' என்று பாட்டுடைத் தலைவராகிய சம்பந்தப்பெருமான் செய்தி வருகிறது. அங்கே, அப்பெருமானே நம்பி யாண்டார் நம்பிகள் வருணிக்கிருர், தளர்வில் புகலியர் அதிபன், நதி தரு வரதன், அணி தமிழ் விரகன் என மூன்று தொடர்கள் வருகின்றன. சீகாழிப் பெருமான், தமிழ் விரகன் என்பன யாவரும் தெளிந்து கொள்ளக் கூடியனவே. நதி தரு வரதன் என்ற தொடரை மாத்திரம் சற்று ஆய்ந்து சிந்திக்க வேண்டும். கதியைத் தரும் வரதன் என்ருே, நதியால் தரப்பெற்ற வரதன் என்ருே அதற்குப் பொருள் கொள்ளலாம். சம்பந்தர் எந்த நதியையும் உண்டாக்கியதாக வரலாறு இல்லை. ஆகவே, நதியால் தரப்பெற்ற வரதன் என்பதுதான் பொருத்தமாக இருக்கவேண்டும். ஞானசம்பந்தர் எந்த நதியால் தரப் பெற்றவர்? சம்பந்தர் வரலாற்றில் அந்தச் செய்தியையும் காண முடியாது. ஆனல் சம்பந்தர் முருகனுடைய திருவவ தாரம் என்ற கினைவோடு பார்த்தால் இத் தொடருக்குப் பொருள் விளங்கிவிடும். கங்காநதியால் தரப்பெற்ற வரதனல்லவா முருகன்? காங்கேயன் என்ற திருநாமம் அதனால் அன்ருே அமைந்தது?

ஆயிர முகத்துநதி பாலனும் நதிபுத்திர என்று கதிதரு வரதனேப் பாடுகின்ருர் அருணகிரி நாதர். - -