பக்கம்:பெரும் பெயர் முருகன்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ன்து சரி? 99

ஆதலின் நம்பியாண்டார் நம்பிகளுக்கும் திருஞான சம்பந்தர் முருகன் திருவவதாரம் என்பது உடம்பாடே என்று கொள்ளலாம்.

இவ்வாறு இருக்க, ஒரு சாரார் இந்தக் கொள்கையை மறுப்பதற்குக் காரணம் என்ன? தக்க காரணம் இருக் கிறது. ஞானசம்பந்தப் பெருமான் ஒரு தந்தைக்கும் தாய்க்கும் புதல்வராகத் தோன்றினர். இவ்வாறு பிறத்தல் இறைவனுக்கு ஏற்புடையதன்று. ஆதலின் முருகனுடைய அவதாரமாகக் கூறுதல் பொருந்தாது” என்பதே இந்த அன்பர்களின் எண்ணம்.

அருணகிரிநாதர்,

பெம்மான் முருகன் பிறவான் இறவான்

என்று பாடினர். அவரே ஞானசம்பந்தப் பெருமான முருகனகப் பாடிப் போற்றினர். இந்த இரண்டிற்கும் முரண்பாடு இருப்பதுபோலத் தோற்றினும், உண்மையில் முரண்பாடில்லே. முருகனுடைய அமிசாவதாரம் என்று கொண்டு சமாதானம் செய்யலாம். அந்தச் சமாதானத் துக்கே இடமில்லாமல் இருக்கட்டுமே என்பது முருகன் அவதாரமன்றென்பார் எண்ணம். மகாகவி மீட்ைசி சுந்தரம் பிள்ளையவர்களுக்கு ஞானசம்பந்தர் முருகன் அவதாரம் என்று சொல்வது உடம்பாடன்று.

இந்தச் சிக்கலே ஒரு புலவர் வேருெரு விதத்தில் தீர்த்து விட்டதாகக் கேள்வியுற்றிருக்கிறேன். ஞான சம்பந்தர் தாய் வயிற்றிலே பிறக்கவில்லை. சிவபாத இருதயருக்குப் பொய்கையின்கண் தாமரைப் பூவில் கிடைத்தார்’ என்று அவர் பாடியிருக்கிருராம்.

எப்படி ஆலுைம் இந்த இருவகைக் கொள்கைகளும் நூல் வழக்காற்றில் கிலத்துப்போய்விட்டன. ஒரே காலத்தில் இருவகைக் கொள்கைகளும் தமிழ் காட்டில்