பக்கம்:பெரும் பெயர் முருகன்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவுணரை அழித்த வேல்

உலகத்தில் தோன்றிய உயிர்களுக் கெல்லாம் உடல், கருவிகள், உலகப் பொருள்கள், இன்ப நுகர்ச்சி ஆகிய வற்றைத் தந்து பாதுகாக்கிருன் இறையவன். அநாதி, காலமாக அவனுடைய அருளாணே இயங்கி வருகிறது. உலகத்தை ஆக்கி அளித்து அழித்து மறைத்து அருளும் செயல்களே இடைவிடாது இயற்றிவரும் இறைவன் உயிர் களின் பக்குவத்துக்கு ஏற்பச் சிறப்பான முறையில் தோற்று கிருன். உருவமும் பெயரும் கொள்கிருன். உயிர்களின் பக்குவம் உயர்ந்து தன்னே அடையுமட்டும் அவன் அருள் வேகம் காத்து கிற்பதில்லை. அவனும் ஆருயிரை ஆட் கொள்ள இறங்கி வருகிருன். -

இந்தக் கருணேயின் விளேவாகப் பக்குவ ஆன்மாக்கள் அவ்வப்போது இறைவனே உருவத்தோடு கண்டு போற்றி வழிபடுகின்றன. சில அடியார்களுக்கு ஆண்டவன் அருள். செய்ய வந்த அவசரம் உலகமெல்லாம் போற்றும்படி கின்று நிலவுகிறது. இவ்வாறு உருவமும் நாமமும் இல்லாத ஆண்டவனுக்குப் பல பல உருவங்களும் காமங்களும் அமைந்தன. அப்படி அமைந்தது ஆன்மாக்கள் வழிபட்டு உய்யும் பொருட்டே ஆகும். - -

ஒருநாமம் ஒருருவம் ஒன்றும்இலார்க்கு ஆயிரம், திருநாமம் பாடிநாம் தெள்ளேனம் கொட்டாமோ

என்று மணிவாசகர் பாடுகிருச்.