பக்கம்:பெரும் பெயர் முருகன்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ჭ8 பெரும் பெயர் முருகன்

சிவபெருமானுடைய அவதாரங்கள் பல. எல்லாம் கடந்து கின்ற அவனே சத்தியாய்ச் சிவமாய் முருகவேளாய் உலகுயிர்களுக்கு அருள் செய்ய வேண்டி இலங்குகிருன், முருகனுடைய திருவவதாரமும் சிவபிரானுடைய அருட் சிறப்பைக் காட்டுவதாகும். அருவமாய் இருந்த கடவுள், உருவங் கொண்டு வந்த நெறியில் அமைந்த சிறந்த அவ தாரம் அது. அநாதியாய் ஒன்ருக இருந்த பிரமமே பல வாகவும் கின்றது. அந்தச் சோதிப் பிழம்பு உயிர்கள் தன் கருணைத் திறத்தை மிகுதியாகப் பெறவேண்டு மென்ற அருள் உள்ளத்தால் எடுத்த அவதாரம் அது. ஐந்து திரு முகமும் பத்துத் திருக்கரங்களும் உடைய திருக்கோலம் போதாதென்று ஆறு திருமுகமும் பன்னிரண்டு திருக்கரங் களும் கொண்டு தோன்றினன். கருனே வெள்ளம் பெரு கும் கால்வாய்கள் ஐந்தாக இருந்தது போதாதென்று ஆருகிப் பத்து மடையைப் பன்னிரண்டு மடை ஆக்கினற் போல அழைந்தது. இது.

அருவமும் உருவும் ஆகி

- அநாதியாய்ப் பலவாய் ஒன்ருய்ப்

பிரமமாய் நின்ற சோதிப்

பிழம்பதோர் மேனி ஆகிக்

கருணைகூர் முகங்கள் ஆறும்

கரங்கள் பன் னிரண்டும் கொண்டே

ஒருதிரு முருகன் வந்தாங்கு

உதித்தனன் உலகம் உய்ய

என்று கந்தபுராணம் கூறுகிறது. முன்னமே இருந்த கருணை கூர்ந்ததாம். கூர்தல் என்பதற்கு உள்ளது சிறத்தல் என்பது பொருள். முன்பு இருந்த கருணை பின்னும் சிறந்து ஓங்கவே, முன்பு இருந்த முகம் ஐந்தும் ஆருயின; பத்துக் கரங்கள் பன்னி