பக்கம்:பெரும் பெயர் முருகன்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவுணரை அழித்த வேல் ვუ

ரண்டாயின. இந்தக் குறிப்பை, கருணை கூர் முகங்கள் ஆறும் கரங்கள் பன்னிரண்டும் கொண்டே' என்ற அடி புலப்படுத்துகிறது. கருணை பெருகிய திருக்கோலத்தோடு ஒரு திருமுருகன் ஆங்கு உதயம் செய்தது, உலகமெலாம் உய்வதற்குத்தான். ...

ஆருயிர்களுக்கு வழங்கும் கருணேயைப் பின்னும் பெருக வழங்க முருகளுக எழுந்தருள எண்ணினன் சிவ பெருமான். அந்த அவதாரத்துக்கு உலகம் உய்வது காரண மாக இருந்தாலும், ஏதேனும் ஒரு தலைக்கீடு கொண்டு தோன்ற எண்ணினன். சூரபதுமனுடைய மறச் செய லால் தேவர் இடுக்கண் அடைந்து முறையிட்டார்கள். அந்த முறையீட்டுக்கு இரங்கி அவர்களுடைய துன்பத்தை நீக்குவதை வியாஜமாக வைத்து, எல்லா உயிர்களுக்கும் அருள் பாலிக்க முருகன் திருவவதாரம் கிகழ்ந்தது.

வெந்தகுவ்ர்க்கு ஆற்ருத விண்ளுேர் முறைக்கிரங்கி ஐந்து முகத்தோ டதோமுகமும்-தந்து - என்று கந்தர் கலிவெண்பாவில் குமரகுருபர முனிவர் பாடு

ஆகவே முருகன் திருவவதாரத்தின் முதல் காரியம் அசுர சங்காரம். இந்தச் சங்காரத்துக்குக் கருவியாக இருப்பது வேல். . . . . . . . .

பரிபாடலில் கடுவன் இளவெயினனர் முருகனைப் பாட நினைக்கிருர். அவருக்கு அப்பெருமான் சூரசங்காரம் செய்த வீரத் திருவிளையாட்டு முதலிலே நினைவுக்கு வரு கிறது. அவனுடைய திருக்கை வேலும் அவர் உள்ளத்தில் ஒளிவிடுகிறது. முருகனுடைய வாகனமாகிய பிணிமுகம் என்ற யானையையும் கினைக்கிருர்.