பக்கம்:பெரும் பெயர் முருகன்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மால்வரை உடைத்தவன் 45

பொருதோகை சுரராச புரமேற

விடுகாளை புகழ்பாடுவாம்

என்பது அவர் பாட்டு. ஒரு மயிலின்மேல் ஏறியருளித் தனக்குப் பகைவனை சூரபன்மாவுக்கு மறைவாய் ஓடிவர லான மலையினுடைய மார்பும் சூரபள்மாத்தானும் ஒக்க ஒரே காலத்திலே ஊடுருவும்படி வேலேறுபடப் பொருதரு ளிச் சமுத்திர ஆரவாரத்தைச் சுவர்க்கத்து ஏறப் போக விட்ட இளையோனுடைய புகழைப் பாடுவாம்' என்று பழைய உரையாசிரியர் இதற்குப் பொருள் எழுதியிருக் கிருர். அருணகிரிப் பெருமானுக்கும் இந்தப் பழங்கை தெரியும். -

கிளைபட் டெழுசூர் உரமுங் கிரியும் தொளைபட் டுருவத் தொடுவே லவனே என்ற அநுபூதித் திருப்பாட்டில் இச்செய்தியைச் சொல்லி யிருக்கிரு.ர். -

சூரனைத் தொளைத்த பெருமைக்குச் சமானமானது கிரெளஞ்ச மலையைப் பிளந்த பெருமை. .

............கார்வந்து - உறங்குசிகைப் பொருப்பும்சூர் உரப்பொருப்பும் பிளப்ப......வேல் எடுத்த - என்று திருவிளையாடற் புராணம் கூறுகின்றது. குன்றங் கொன்ற குன்றக் கொற்றம் என்று இந்த வெற்றியைத் திருமுருகாற்றுப்படை பாராட்டுகிறது. . . ... . புலவர் அந்தக் கொற்றத்தை கினைக்கிருர். கிரெளஞ்ச மென்னும் பெரிய மலேயை உடைத்த பெருமையைச் சொல்கிருர். அந்தக் கிரெளஞ்சமலே நாவலந் தீவின், என்று

வடபால் இருந்ததாம். இப்போது இந்தியா