பக்கம்:பெரும் பெயர் முருகன்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 பெரும் பெயர் முருகன் அமைதலும் பிறர் மாட்டு நடக்கும் கியதி ஆல்ை அந்த நியதி உன் வலமாகிய ஆனேக்கு உட்பட்டது. உயர்பு-உயர்வு, இழிபு:இழிவு. ஏைேர்-உன்னே யல்லாத பிறர். வலம்-வெற்றி: இங்கே ஆணே. .

'பூசாரியின் தோத்திரத்தை உண்மையாக்கி முருகன் வருகிருனே! என்று ஆச்சரியப்பட்டுப் போன புலவர் முருகனை இப்படிப் பாராட்டுகிருர். பூசாரியின் வழி பாட்டுக்கு இரங்கி, தன் நிலையினின்றும் இறங்கி வரு கிருன் முருகன். அதற்குப் புலவர் சமாதானம் சொல் கிருர் அவன் வைத்தது சட்டம் என்கிருர். ஆனல் இதைக் காட்டிலும் இன்னும் பெரிய செய்தி கினேவுக்கு வருகிறது. பிறவிப் பிணிக்கு மருந்தாகும் திருவருளே ஆருயிர்களுக்கு வழங்கும் முருகனே பிறந்தானென்ற கதை ஞாபகத்துக்கு வருகிறது. -

முருகனுடைய திருவவதாரக் கதை பல பல வேறு. பாடுகளோடு வழங்கும். காலத்துக்குக் காலம் அந்தக் கதையில் மாற்றம் அமைந்திருக்கிறது. இதிலிருந்தே முருகனுடைய அவதாரம் ஏனையோர் பிறவி போன்றது. அன்றென்பது வெளியாகும். .

சங்க காலத்து நூலாகிய பரிபாடலில் வரும் இந்தப் பாட்டில் கடுவன் இளளயினனர் கூறும் திருவவதாரக் கதை, கந்தபுராணக்கதைக்குப் பலவகையில் வேறுபட்டது. சங்க காலத்தில் முருகன் திருவவதாரத்தைப்பற்றிய இந்த வரலாறே வழங்கிவந்தது என்ற நாம் கொள்ளவேண்டும்.

இனி, திருவவதாரக் கதையைக் ಹ೧6ುಗಿಬಿಡಿurb.