பக்கம்:பெரும் பெயர் முருகன்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரு அவதாரக் கதை 81

சிவபெருமான் உமாதேவியோடு காமத்தை நுகர் கின்ற திருமணம் புரிந்து கொண்டான். அத்தேவியோடு அளவளாவி நெடுங் காலம் இருந்த பிறகு, அமைதி உற்ற சமயத்தில் இமையாகாட்டத்தை உடைய அப்பெருமானி டத்திலே இந்திரன் வந்தான். "அப்பனே, ஒரு வரம் வேண்டும்” என்று கேட்டுக்கொண்டான். கேள்; தருகிருேம்’ என்ருன் இறைவன். உமாதேவியோடு அளவளாவியது போதும்; அதன் விளேவாக உண்டாகிய கருவைச் சேதித்தருள வேண்டும்' என்ருன். சத்தியமே உருவாகிய எம்பெருமான் இந்திரனுக்குக் கொடுத்த வரத்தை மாற்ருமல், அதனைத் தன்னுடைய மழுவா யுதத்தைக் கொண்டு பல கண்டமாகச் சேதித்தான்.

- அதனே இந்திரன் கொண்டு சென்ற பொழுது ஏழு முனிவர்களும் அதனேக் கண்டனர். "இது அரு வாகிய இறைவன் உருப்பெற்று உயிர்களுக்கு இன்பம் , கல்கும் குழந்தை யாவதற் குரியது” என்று ஞானத் தால் உணர்ந்தனர். ஆகவே, அதனே இந்திர னிடம் பெற்றுக் கொண்டனர். தம் மனைவியர் வாயிலாக இறைவனுடைய அமிசம் உருப்பெற. வேண்டும் என்று எண்ணிய முனிவர், அதனை அம். மகளிர் தாங்கமாட்டார்கள் என்பதை உணர்ந்து, வேள்வி: செய்து அதன் கண்ணே அதனைப் பெய்தனர். பிறகு வேள்விப் பிரசாதமாக கின்ற அதனே அருந்ததி ஒழிந்த ஆறு மகளிருக்கும் பகிர்ந்து கொடுத்தனர். ஆறு முனிவ. ருடைய மகளிரும் கார்த்திகை நட்சத்திரமாக விளங்கு பவர்கள். கார்த்திகை மாதராகிய அந்த ஆறு பேரும் வேள்விப் பிரசாதத்தை நுகர்ந்தவுடன், சூல் பெற்றனர், தம்முடைய கணவன்மாருடைய விருப்பப்படி அயின்ற "மறுவறு கற்பினை உடைய அவர்கள் கருப்பத்தில் இறை, வன் அமிசம் வளர்ந்தது. பிறகு இமாசலத்தின் சார்பிலே,