பக்கம்:பெரும் பெயர் முருகன்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

65 . . . பெரும் பெயர் முருகன் தருப்பை வளர்ந்தோங்கிய சரவணப் பொய்கையில் தாமரை மலரில் அம்மகளிர் அறுவரும் கருவுயிர்த்தார்கள்.

இவ்வாறு முருகன் திருவவதாரம் நிகழ்ந்ததென்று அக் காலத்துப் பெளராணிகர் சொல்லி வந்தார்களாம்.

இந்தக் கதையைச் சொல்லவந்த புலவர் முதலில் சிவபெருமானைப் பற்றிப் பேசுகின்ருர். அப்பெருமான் திரிபுர சங்காரம் செய்த வீரச் செயலைச் சொல்கிருர். திரி புரசங்காரக்கதை முன்பும் வழங்கி வந்ததென்று இதல்ை தெரியவருகிறது.

- முப்புரத்தை இறைவன் அழிக்கப் புறப்பட்ட காலத் தில் ஆதி அந்தணகிைய பிரமதேவன் சாரதியாக இருந் தான். அவன் எப்படி எப்படிக் குதிரைகளே வேகம் அறிந்து விடவேண்டுமோ அப்படி விட்டான், குதிரை களின் நடையைத் தன் பிடிப்பிலே வைத்துக் கொண்டான். வேதமாகிய குதிரைகளேப் பூண்ட பூமியாகிய தேர் அது. அதன்மேல் ஊர்ந்து சென்ருன் இறைவன். நாகத்தை நாண் கயிருகவும் மலையை வில்லாகவும் கைக்கொண்டு திரிபுர சங்கரத்துக்குப் புறப்பட்டான். -

அந்த முப்புரங்களும் முவகை மதில்களே உடையவை. வெள்ளி, பொன், இரும்பு என்ற மூன்றிலுைம் அமைந் தவை அவற்றை ஓர் அழலம்பினலே எரியும்படி செய் தான். புரங்கள் மூன்றும் எரியும்போது அந்த வெப்பத் தால் திசைகளெல்லாம் அழன்றன. ... ." . . . . . . .

ஆதி அந்தணன் அறிந்து பரிகொளுவ வேதம் மாபூண் வையத்தேர் ஊர்ந்து நாகம் நாளு மலைவில் ஆக மூவகை, ஆரெயில் ஓர்அழல் அம்பின் முளிய மாதிரம் அழல எய்து ' ', " . . . . . .