பக்கம்:பெரும் பெயர் முருகன்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரு அவ்தார்க் கதை 63

(பிரம தேவன் ஒட்டும் முறையை அறிந்து குதிரைகளின் வேகத்தைத் தன் கையிலே அடக்கி வைக்க, வேதமாகிய குதிரை யைப் பூண்ட பூமியாகிய தேரில் ஏறிச் சென்று, ஆதிசேடகிைய பாம்பு காணுகவும் மேருமலே வில்லாகவும் கொண்டு, மூன்றுவகை யான வெல்லுதற்கரிய மதில்களே ஒரு தீயை முட்டும் அம்பிளுல் அழியும்படியும் திசைகளெல்லாம் எரியும்படியும் எய்து. பரி-நடை. கொளுவ-கைக் கொண்டு நடத்த. மா-குதிரை. வையத்தேர். பூமியாகிய தேர். முளிய-எரிய. மாதிரம்-திசை.) . . . . .

இவ்வாறு எய்த பெருமானே அந்தணர் வேள்வியாலே

போற்றுகின்றனர். வேள்வியின் தலைவனுக இருப்பவன் சிவபெருமான். அமரர் பலரையும் எண்ணி வேள்வியில் அவியுணவைக் கொடுத்தாலும் சிவபெருமான் அருளின்றி அது கிகழாது. ஆகவே அப்பெருமான் அவியேற்றல் இன்றியமையாதது. அமரருக்கு விருந்தாக வேள்வி செய்து அவியுணவை அந்தணர் வழங்கும்போது சிவபெரு மான் தலைமை தாங்கி கின்று அந்த அவியுணவை ஏற்று. மகிழ்வான். அப்பெருமானேயும் அந்தணனென்றும், முனி. வனென்றும், பார்ப்பானென்றும் நூல்கள் கூறும்.

திரிபுரம் எய்த செய்தியையும், வேள்வியில் அவிர்ப் பாகம் ஏற்கும் செய்தியையும் இணைத்துச் சொல்கிருர், புலவர். . - -

- அமரர் வேள்விப்

பாகம் உண்ட பைங்கட் பார்ப்பான்.

(தேவரை எண்ணிச்செய்யும் வேள்வியில் அவிர்ப்பாகத்தை ஏற்றருளிய கருணே பொழியும் திருவிழிகளையுடைய அந்தணன், ! வேள்விப்பாகம்-அவிர்ப்பாகம்.பைங்கண்-பசியகண்; கோபத்தாற் பசிய கண் என்று பரிமேலழகர் உரை எழுதுவர்; அருளாற் குளிர்ந்த கண் என்று கொள்வது சிறப்பு.

... இறைவன் உமாதேவியை மணம் செய்து கொ

டான். அப் பெருமாட்டியோடு நெடுங்காலம் இன்பம் o