பக்கம்:பெரும் பெயர் முருகன்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 - பெரும் பெயர் முருகன்

நுகர்ந்தான். தேவர்களெல்லாம் தங்களுக்கு வந்த இடுக்

கண் தீரவேண்டுமென்று ஏங்கி நின்றனர். இறைவளுே. உமாதேவியோடு ஒன்றி கின்றனன். இந்த கிலேயில் சிவ. பெருமானுடைய கவனத்தைத் தங்கள்பால் திருப்புவதற்கு இந்திரன் புறப்பட்டான். சிவபெருமானிடம் சென்று, "இப்புணர்ச்சியைத் தவிர்ந்தருள வேண்டும்” எனக்

கேட்க இறைவனும் அவ்வாறே வரம் ஈந்தான். -

உமையொடு புணர்ந்த காம வதுவையுள் அமையாப் புணர்ச்சி அமைய, நெற்றி இமையா நாட்டத்து ஒருவரம் கொண்டு - விலங்கென, விண்ளுெர் வேள்வி முதல்வன்.

(உமாதேவியோடு இறைவன் இன்புற்ற திருமணத்திp அமையாமல் நிகழ்ந்த புணர்ச்சி அமையுமாறு, நெற்றியிலே இமை யாத நாட்டத்தையுடைய அப்பெருமானிடத்திலே, விண்ணுேர் முதல்வனும் வேள்வி முதல்வனுமாகிய இந்திரன் ஒரு வரத் தைப் பெற்றுக் கொண்டு, "இந்தச் செயலினின்றும் தவிர்க் தருள்வாயாக’ என்று வேண்டிக்கொள்ள. காம வதுவை. இச்சையாற் செய்த திருமணம். இமையா நாட்டம்-இமையாத காட்டத்தையுடைய இறைவன்; அன்மொழித்தொகை. விலங்கு தவிர்க.1. - - - - - ; :- .. இந்திரனுடைய வேண்டுகோளுக்கு இரங்கின்ை இறைவன். அப்போது வெளியான கரு, உலக மெல்லாம் தாங்கற்கரிய உக்கிரம் கொண்டு கின்றது. இந்திரனுக்குக் கொடுத்த வாக்கை நிறைவேற்ற வேண்டி அக்கரு வைத் தன் மழுவாயுதத்தால் சேதித்தான். அதுகண்டு இவ் வுலகேழும் வியந்தது. 'மாற்ருத வாய்மையை உடைய வன்' என்று பாராட்டியது. ................................

விரிகதி மணிப்பூண் அவற்குத்தான் ஈத்தது அரிதென மாற்ருன், வாய்மையன் ஆதலின்: