பக்கம்:பெரும் பெயர் முருகன்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

. 76 ೧Lಠಹಿ। பெயர் முருகன்

ஒவ்வொரு தேவரும் தம்முடைய மெய்யினின்றும் பிரித்து அப்பொருள்களை அளித்தனர். பிறராலே அல்லற். படாத ஆற்றலையுடைய அக்கினிதேவன் தன் உடம்பினின் றும் பிரித்த ஆற்றலைச் சிவந்த கோழியாக்கி, அந்தச் செல்வ வாரணத்தை முருகன் திருக்கரத்தில் அமரும்படி வழங்கின்ை. வானத்து வளங்கெழு செல்வத்தையெல் லாம் ஆளும் அரசகிைய இந்திரன் ஆயிரங் கண்ணுடை , யவன். அவன் தன் மெய்யினின்றும் பிரித்துக் கண்கள் பல விளங்கும் தோகையில்ை அழகுபெற்ற மயிலைக் கொடுத்தான். ஒரு பால் கோடாத ஆணயைத் தாங்கும் யமன் தன் மேனியினின்றும் பிரித்து வெள்ளாட்டுக் குட்டி யைத் தந்தான். இப்படியே தேவர் பலர் பல பொருளை வழங்கினர். புள்ளியையும் கோடுகளையும் உடைய வில்லை. ஒரு தேவன் அளித்தான். மானே ஒருவன் வழங்கினன், வாளை ஒருவன் ஈந்தான். இலே செறிந்த ஈட்டியை ஒருவ னும், குடாரியை ஒருவனும், கணிச்சியை ஒருவனும் தந் தார்கள். அக்கினி, மாலை, மணி என்பவற்றைச் சிலர் தந் தார்கள். வேறு வேறு உருவத்தோடு உள்ள இப்பொருள் களேத் தன்னுடைய பன்னிரு திருக்கரங்களில் ஏற்றரு எளின்ை முருகன். . . . .

மேலே சொன்ன பன்னிரு பொருள்களும் முருகனு. டைய ஏவற்கு அமைந்த படைகளாயின. பெருவலிமையை யுடைய அக்கினி முதலிய தேவர்களின் அமிசங்களே முரு கனிடம் ஆயுதங்களாக கின்று படையாற்றத் தொடங்கின: பிறந்த புதிதிலே, தாமரைப் பொகுட்டாகிய தொட்டிலில் இருந்தபோதே, முருகன் இத்தனை பராக்கிரமத்தை உடை யவனைன். புகழையும் பெற்றன். பல காலமாக அமர. லோகத்தை ஆண்டுவந்த இந்திரனுக்குக்கூட இவ்வளவு புகழ் இல்லை. தேவலோகாதிபதிக்குக் கிடைக்காத புகழ் தேவசேனபதிக்குக் கிடைத்தது. அமரர். செல்வனுக்குக் திடைத்த புகழுக்கு ஒரு வரம்பு உண்டு அந்த வரம்பையும்