பக்கம்:பெரும் பெயர் முருகன்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புகழ்வரம்பு இகந்தோன் 労ウ

இகந்து கின்றது முருகன் புகழ். மிக்க ஆற்றல் பெற்ற தேவர்களின் சக்தியெல்லாம் அவன் கைப்பிடியில் அடங்கி நின்றன. கோழியாகவும் ஆடாகவும் மயிலாகவும் கணிச்சி முதலியனவாகவும் உருப்பெற்று அடங்கி நின்றன.

அல்லலில் அனலன் தன்மெய்யிற் பிரித்துச்

செல்வ வாரணம் கொடுத்தோன்.

(துன்பம் இல்லாத அக்கினிதேவன் தன் மெய்யினின்றம் பிரித்துச் செல்வமாகிய கோழியைக் கொடுத்தான். கொடியாக கிற்றலின் செல்வ வாரணம் என்று சிறப்பித்தார்.) * ...

......வானத்து வளங்கெழு செல்வன் தன் மெய்யில் பிரித்துத் திகழ்பொறிப் பீலி அணிமயில் கொடுத்தோன். |தேவலோகத்துச் செல்வங்களுக்கெல்லாம் உரிமை பூண்ட செல்வனுகிய இந்திரன் தன் மேனியிலிருந்து பிரித்து, விளங்கு கின்ற கண்களோடு கூடிய அலங்காரமான மயிலைக் கொடுத் தான். பீலியை அணிந்த மயில் என்றும் சொல்லலாம்.)

திருந்துகோல் ஞமன்தன் மெய்யிற் பிரிவித்து இருங்கண் வெள்யாட்டு எழில்மறி கொடுத்தோன். (பட்சபாதமின்றிச் செலுத்தும் திருத்தமுடைய ஆணையாகிய கோலேயுடைய யமன் தன் உடம்பினின்றும் பிரித்து, கரிய கண்ணையும் அழகையுமுடைய வெள்ளாட்டுக் குட்டியைக் கொடுத்தான்.) - - - -

ஆஅங்கு, அவரும் பிறரும் அமர்ந்துபடை அளித்த மறியும் மஞ்ஞையும் வாரணச் சேவலும் பொறிவரிச் சாபமும் மானும் வாளும் செறியில் ஈட்டியும் குடாரியும் கணிச்சியும் தெறிகதிர்க் கனலியும் மாலையும் மணியும் வேறுவேறு உருவின் இவ்வாறிரு கைக்கொண்டு.