பக்கம்:பெரும் பெயர் முருகன்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

今8 பெரும் பெயர் முருகன்

(அவ்வாறு அந்தத் தேவர்களும் வேறு தேவர்களும் விரும் பிப் படையாக அளித்த ஆடும், மயிலும், சேவற்கோழியும், புள்ளிகளையும் கோடுகளையும் உடைய வில்லும், மானும், வாளும், இலே செறிந்த ஈட்டியும், கோடரியும், குந்தாலியும், சுடு கின்ற கதிரையுடைய அக்கினியும், மாலேயும், மணியும் ஆகிய இவற்றை வேறு வேறு உருவத்தோடு தன் பன்னிரண்டு திருக் கரங்களிலே ஏந்திக்கொண்டு.). -

மறுவில் துறக்கத்து அமரர் செல்வன்றன் பொறிவரிக் கொட்டையொடு புகழ்வரம்பு - - இகந்தோய்! (புள்ளியும் கோடும் உடைய தாமரையின் கர்னிகையில் இருக்கும் பருவத்தில் அந்த இருக்கையோடு குற்றமற்ற சொர்க்கலோகத்தில் உள்ள தேவர் கோமானுடைய புகழின் எல்லேயை விஞ்சிய பெரும்புகழை உடையோய். தொட்டிலிலே புகழ்படைத்தாய் என்றபடி கொட்டை-பொகுட்டு; கர்னிகை.) - முருகன் திருவவதாரம் செய்த கணத்திலே தேவர் செருக்கை அடக்கித் தன் ஆற்றலக் காட்டின்ை. எல்லாம். வல்ல இறைவனகிய சிவபிரானது சக்தியாகிய முருக வேளிடம் ஆற்றல் சான்ற அமரர் சக்திகளெல்லாம் படை களாக உருவெடுத்து அடைந்து, அவன் ஏவலுக்கு அடங்கி ஒழுகும் கிலேயில் இருந்தன. தேவர்களே அடக்கி, ஆளும் திறலுடைய விறற்சேயாகிய முருகன் ஆயுதம் இன்றியே பெருவீரம் காட்டும் பெம்மாகை இருந்தான். தங்கள் பணிவையும் அன்பையும் காட்டும் பொருட்டே தேவர்கள் அவனுக்குப் படைக்கலங்களே வழங்கினர்கள். உதித்தபோதே வீர விளையாட்டைக் காட்டிப் பெரும் புகழ் பெற்ற பெருமான் முருகன். தேவ சேனபதி என்ற பதவி தேவ அரசனுக்கு அடங்கியதன்று. தேவ மன்னன் வலியிழந்து கிற்கும்படி செய்தவன் அல்லவா முருகன்? அவன் தேவராஜனக் காட்டிலும் மிக்க வலியும், மிக்க புகழும் உடையவன். புகழ் வரம்பு இகந்த இளமுருகன்