பக்கம்:பெரும் பெயர் முருகன்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 பெரும் பெயர் முருகன் கோடாக இருப்பவை. தெய்வத்தைப் போற்றுபவர்கள் அறத்தையும் போற்றுவது கடமை. அறமின்றித் தெய்வம் இல்லை. தெய்வமே அறத்தின் உருவமாக இருப்பது, அறத்தைக் கொன்று மறத்தை வளர்ப்பவர் அசுரர். அவர் குலத்தை முதலறத் தொலைக்கத் திருவவதாரம் செய் தவன் முருகன். அறம் செய்வாரெல்லாம் அவனுக்கு அன்பர். மறம் செய்வார் பகைவர். அவனுக்குப் பகைவர் என்று சொல்வதைவிட ஆருயிர்களுக்கே பகைவரென்று. சொல்ல வேண்டும். ஆருயிர்களுக்குப் பகைவர்களே ஆண்டவனுக்கும் பகைவர்கள். .

ஆண்டவனுடைய அருளுக்குப் பாத்திரமாவதற்கு அறம் செய்யவேண்டும். அறநெறி கின்ருர் அருள் வழி நிற்பார். இவற்றையெல்லாம் கினைந்து முருகனடியாராகிய இளவெயினனர் மேலே சில செய்திகளைச் சொல்கிருர்.