பக்கம்:பெரும் பெயர் முருகன்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிரார்த்தன

இல்லறம், துறவறம் என்னும் இருவகை அறங்களி லும் நின்று, வழுவாது தமக்குரிய செயல்களேச் செய்வார் உலகில் அறத்தையும் அன்பையும் அருளேயும் வளர்ப்பவர் கள். அறம் இல்லாவிட்டால் உலகத்தில் உயிர்கள் வாழ இயலாது. அறநெறிபற்றி வாழும் ஆருயிர்களுக்குப் பகை, சினம் முதலிய தீய இயல்புகளைப் போக்கக் காரண மாக இருப்பது அன்பு, அந்த அன்புகொண்டு வாழும் மக்களுக்கு இறைவனது அருள் கிடைக்கும்.

இல்லறம், துறவறம் என்னும் அறநெறியில் கிற்பவர் கள் இறைவன் திருவருளேப் பெறுவார்கள். அல்லாதார் பெற இயலாது. அறத்தினின்று வழுவியவர் அன்பு செய்தும் பயன் இல்லை. முருகன் உலகில் அறநெறியை நிலநிறுத்துவதற்குத் துணையாகிய திருவருளே உடைய வன். அறத்தை அணியாகக் கொள்ளும் மக்கள் யாவரும் அவனுக்கு அடியார்களே.

அறத்தை மேற்கொண்டவர்கள் முருகனுடைய அருளே உடையவர்கள். அவன் அருளின்றி அறம் செம்மை நெறி. யில் நடப்பது அரிது. இல்லறம் நன்கு நடைபெற வேண்டி முருகன் மணவாளத் திருக்கோலத்தோடு காட்சி அளிக்கிருன்.

w ஞானநெறி பற்றித் தவம்புரியும் . பெரியோர்களும் முருகனுக்கு அடியார்களே. அந்த ஞானியரை மாதவர். களெல்லாம் வ ழிபடுவார்கள்.

பெரும்-6