பக்கம்:பெரும் பெயர் முருகன்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 பெரும் பெயர் முருகன்

அறச் செல்வரும் ஞானச் செல்வருமாகிய இருசாரா ரும் முருகனுக்குப் பிரியமானவர்கள். அல்லாதவர் அவனே அணுக முடியாது. -

கடுவன் இள எயினனர் இந்தச் செய்தியைச் சொல்கிரு.ர்.

'முருகா! உலகத்தில் அறத்தை மேற்கொண்டவர்கள் உன் குணமாகிய அருளே மேற்கொண்டவர்கள். அறம் கிரம்பிய இடத்தில் உன் அருள் தங்கும். அவர்கள் உன்னே அணுகும் தகுதி உடையவர்கள். என்றும் கிலே பெற்ற ஞானம் என்னும் இயல்புடையோர் பெருந் தவசி களாலும் போற்றற்குரியவர்கள். அவர்களும் உன்னைச் சேர்ந்து அருள் பெறும் தகுதி உடையோர். அல்லாதவர் கள் உன்னே அணுகுவது இயலாத காரியம்.”

அல்லாதவர் யார்? அவர்கள் இயல்பையும் ஒரளவு சொல்கிருர் புலவர். ஆருயிர்களிடத்தில் அன்பில்லாதவர் நெஞ்சம் தீய நெஞ்சம். அந்த நெஞ்சத்தில் சினம் கிலே பெற்றிருக்கும். பிறருக்குத் துன்பத்தை உண்டாக்குவதே அத்தகைய நெஞ்சத்தை உடையவர் வேலை. அசுர சாதி யென்பது அத்தகையவர்களின் கூட்டங்தான். அன்பில் லாத மக்கள் அவர்கள்.

அல்லாதாரில் இரண்டாவது வகையினர் அறத்தைச் சேராதவர்கள். அறம் இல்லாதவர்களுக்குப் புகழ் இல்லை. பிற சிறப்புக்கள் இருந்தாலும் அறத்தோடு சாராதவருக்கு அச்சிறப்புக்கள் சிறப்புக்கள் ஆகா. சிறப்பில்லாத புல்லியோர் கூட்டத்தில் சேர்த்தக்கவர்கள் அவர்கள். 'சிறப்பினும் செல்வமும் ஈனும் அறத்தினுளங்கு, ஆக்கம் எவனே உயிர்க்கு' என்பது வள்ளுவர் வாய். மொழி. அறத்தை விட்டார் சிறப்பை விட்டாரே ஆவர்.