பக்கம்:பெரும் பெயர் முருகன்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிரார்த்தனை 85

யவரும் தவமுனிவரால் வழிபடப் பெற்ருேருமாகிய ஞானியரை யுன்றி.)

செறுதி நெஞ்சத்துச் சினம் நீடி னேரும் சேரா அறத்துச் சீரி லோரும் அழிதவப் படிவத்து அயரி யோரும் மறுபிறப்பு இல்லெனும் மடவோரும் சேரார் நின்நிழல். -

(உயிர்களுக்குத் தீங்கு செய்யும் தீய நெஞ்சத்தில் கோபம் தங்கியிருப்பவர்களும், தர்மத்தைச் சேராமல் சிறப்பின்றி இருப் பவர்களும், கெட்ட ஒழுக்கத்தால் அழிந்த தவமும் விரதத்தைக் கைவிட்ட தளர்ச்சியும் உடையவர்களும், மறுபிறப்பு இல்லே யென்று சொல்லும் பேதையரும் நின் தாள் கிழலைச் சேரமாட் டார்கள்.

செறுதல்-தீங்கு விளைத்தல். படிவம்-விரதம். அயரியோர். வழுவியவர்.) - -

அன்னேர் அல்லது இன்னேர் சேர்வர். (அத்தகையவர்கள் அல்லாத இத்தகைய நற்குணம் உடை யோர் கின் தாள் கிழலைச் சேர்வர்.) *

நிழல் என்றது வீடுபேற்றை. என்றும் அழியாத இன்ப வீடு இறைவனது தாள். இறைவன் திருவடியே, வீடாக இருப்பது. உலகியலிலும் நிற்க நிழல்' என்று

வீட்டைக் குறிப்பதுண்டு. அழிவற்ற நிழலாக இருப்பது

மோட்சமாகிய வீடு. அதுவே இறைவனது திருவடி. அந்த கிழலை அடையும் தகுதி உடையவர்களையும், தகுதி இல்லாதவர்களையும் ஒருவாறு குறித்தார் புலவர்.

பிறகு தம்முடைய விருப்பத்தைத் தெரிவித்துப் பிரார்த்தனை செய்கிருர். இறைவனிடம் நாம் எதை வேண்டுவது? வீடு வேண்டுமென்று கேட்கலாம். ஆனல்