பக்கம்:பெரும் பெயர் முருகன்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

&6 பெரும் பெயர் முருகன்

சிறந்த பக்தர்கள் அப்படிக் கேட்பதில்லை; அவன் அடியார் களுக்குத் தொண்டு செய்வதையே விரும்புவார்கள். ஆருயிர்கட்கெல்லாம் நான் அன்பு செய்தல் வேண்டும் என்று கேட்பார்கள்.

உலகியலில் ஈடுபட்டவர்கள் கேட்கும் பொருள்கள் எவை? அவர்களுக்கு உலக வாழ்வுதான் நிலையானது. ஆகவே பலவகைப் பொருள் வேண்டுமென்று கேட்பார் கள்; பொருள்களைக் குறைவறப் பெறுவதற்குரிய பொன் வேண்டுமென்று கேட்பார்கள். பொருளும் பொன்னும் கிரம்ப இருந்தும் அவற்ருல் இன்பம் துய்க்காமல் இருப். பவர்களும் உலகில் உண்டு. அப்படியின்றிப் பொருளும் பொன்னும் கிரம்பிய வாழ்வில் போகம் கிரம்பத் துய்க்க வேண்டும் என்று வேண்டிக் கொள்வார்கள்.

புலவர் இவற்றைக் கேட்கவில்லை. முருகனது பெருமையையும் அவன் அருளேப் பெறும் அடியவர்களது இயல்பையும் உணர்ந்தவர் ஆதலின் அவர் நிலையற்ற இவற்றை விரும்பவில்லை.

ஆதலின் யாஅம் இரப்பவை பொருளும் பொன்னும் போகமும் அல்ல. (ஆகையால், யாம் நின்னிடம் வேண்டுமென்று கேட்பவை பொருளும் பொன்னும் இன்ப நுகர்ச்சியும் அல்ல.) -

செல்வரிடம் சென்று ஒருவேளைச் சோறு போடு என்று ஒருவன் கேட்கிருன்; மற்ருெருவன் ஒரு மூட்டை கெல் வேண்டுமென்று கேட்கிருன்; வேருெருவன் ஒரு காணி நிலம் வேண்டுமென்று கேட்கிருன். இந்த மூவரிலும் கிலத்தைக் கேட்கிறவன்தான் சாமர்த்தியசாலி. எதைக் கேட்டாலும் கொடுக்கும் வள்ளலிடத்தில் போவது பெரிதல்ல; அவனிடம் எதைக் கேட்க வேண்டு. மேன்று ஆராய்ந்து கேட்கவேண்டும். . ಫ್ಲಿ.