பக்கம்:பெரும் பெயர் முருகன்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- பிரார்த்தன - 87

புலவர் இந்தக் கலையில் வல்லவர். எப்போதும் சோறு போடும் நிலத்தை யாசிப்பவரைப் போல முருகனிடம் வேண்டிக் கொள்கிறர். - -

'முருகா, உருளுகின்ற பூக்கள் கொத்துக் கொத்தாகப் பூக்கும் கடம்பமாலேயை அணிந்த பெருமானே! உன் பெருமையை உணர்ந்திருக்கிருேம். புரந்தராதியர் பெற்ற பொருளும் குபேரன் பெற்ற பொன்னும் அமரர் பெற்ற போகமும் கின் அருள் பெரு விடில் வீணுகி ஒழிவதை நாங்கள் உணர்வோம். உன் அருள் இல்லாத இடத்தில் அன்பு இல்லை. அன்பு இல்லாத இடத்தில் அறம் இல்லை. அறம் இல்லாவிட்டால் வாழ்வு இல்லை. ஆகவே, உன்னிடத்தில் அடியார்களாகிய தாங்கள் வேண்டும் பொருள் மூன்று. பிறர் வேண்டும் பொருள்களும் மூன்றே. பொருள், பொன், போகம் என்னும் மூன்றையும் அவர்கள் வேண்டுகிறர்கள். எங்களுக்கு அவை தாமே வரும். உன்னே அணுகி அவற்றையா வேண்டுவது? எங்களுக்கு வேண்டும் பொருள்கள் வேறு. பொருள் அல்ல; பண்புகள். முதலில் முருகா, கின் திருவருள் வேண்டும்; அந்த அருளே புணையாகப் பற்றி ஆருயிர்களிடத்தில் மாருமல் செய்யும் அன்பு வேண்டும்; அருளும் அன்பும் கொண்டு அறம் புரியும் திறம் வேண்டும். அருள். அன்பு, அறம் என்ற இந்த மூன்றும் குறைவறப் பெற்ருல் எங்களுக்குக் கை கூடாதது வேருென்றும் இல்லை. உன் அருள் உயிர் களிடத்தில் அன்பு செய்யத் துணையாகும். அந்த அன்பைச் செயலிலே காட்டுவதே அறம். ஆகவே இந்த மூன்றையும் எங்களுக்கு வழங்கவேண்டும் அப்பா'

என்ன அழகான பிரார்த்தனே! அருளால் அன்பும் அன்பினல் அறமும் கிரம்பினால் உலக முழுவதும் இன்ப வீடாகிவிடும். வீடு என்ற மோட்சம் இந்த உலகத்துக்குே