பக்கம்:பெரும் பெயர் முருகன்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88. பெரும் பெயர் முருகன்

வந்துவிடும். உலக முழுவதுமே உய்யவேண்டும் என்ற நோக்கம் உள்ள சான்ருேருக்குத்தான் இப்படிப் பிரார்த்தனை செய்யும் உணர்வு வரும். -

நின்பால் அருளும் அன்பும் அறனும் மூன்றும் உருள் இணர்க் கடம்பின் ஒலிதா ரோயே! (உருளுகின்ற பூங்கொத்தையுடைய தழைத்த கடம்ப மாலையை அணிந்தவனே, (யாம் உன்னிடத்தில் வேண்டுமென்று இரக்கும் பொருள்கள்) கின்னிடத்தில் அமைந்துள்ள அருளும், அன்பும், அறமும் ஆகிய இம் மூன்றுமே.1 r அருளென்னும் பொருளும் அன்பென்னும் பொன் னும் அறமென்னும் போகமும் வேண்டுகிருர் புலவர். இந்த மூன்றும் ஒன்ருேடு ஒன்று தொடர்புடையவை. அருளல்லாத மருளும், அன்பல்லாத பகைமையும், அறமல்லாத மறமும் வளரும் இடம் அசுர லோகம். அருள், ! அன்பு, அறம் ஆகிய மூன்றும் தெய்விகப் பண்புகள். மனிதன் இந்த முன்றையும் பெற்ருல் தெய்வமாகி விடுகிருன். இவற்றிற்கு மறுதலையாகிய மருள், பகை, மறம் என்ற இயல்புகள் உலகில் வளர இடம் கொடுத்தல் ஆகாது. கடவுளின் பெருமையையும் ஆற்றலேயும் உணராத மருளும், ஆருயிர்களிடத்தில் மன நெகிழ்ச்சி பெற்று அன்பு செய்யாத பகையும், செய்யும் செயலை நன்மை பயக்கும் வண்ணம் அறநெறி நின்று செய்யாத மறமும் உலக வாழ்வை நரகமாக்குகின்றன. உலகில் அருளும் அன்பும் அறமும் ஒருசார் இருக்கின்றன. மருளும் பகையும் மறமும் ஒருபால் தாண்டவமாடுகின்றன. மருள் முதலிய மூன்றும் தலைமை பெற்று அரசாளுவதனல் அணுக்குண்டும் அடக்குமுறையும் போர்களும் கிகம் கின்றன. அமைதி குலகிறது. மக்களின் உயிரும் உள்ளமும் உடம்பும் அழிகின்றன. அருளால் உயிர்