பக்கம்:பெரும் பெயர் முருகன்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிரார்த்தனே . 89

தழைக்கும்; அன்பால் உள்ளம் தழைக்கும்; அறத்தால் உடல் தழைக்கும். முருகன் இந்த மூன்றையும் உலகில் மலியும்படி செய்யும் தெய்வம். ஆகவே அப் பெருமானிடத் தில் புலவர் இந்த மூன்றையும் வேண்டுகிரு.ர்.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இத்தகைய சிறந்த கிலேயில் முருகனைத் தமிழர் வழிபட்டிருக்கிருர்கள். இந்த உலக வாழ்வைச் சுயநலத்தோடு அநுபவிக்கும் ஆசை புலவருக்கு இல்லை. உலகத்தினின்றும் நீங்கி எங்கோ உள்ள மோட்சலோகத்தில் வாழும் ஆசையும் இல்லை. இந்த உலகத்தையே இன்ப உலகமாக்க விரும்பு. கிருர். அருள் வித்திட்டு அன்புப் பயிர் விளேத்து அற. மென்னும் போகத்தை ஆருயிரனத்தும் நுகரும்படி செய்யவேண்டு மென்பது அவர் ஆர்வம். அவர் செய்யும் பிரார்த்தனே இந்த ஆர்வத்தை உள்ளடக்கியது. அதைக் காட்டிலும் சிறந்த வேண்டுகோளைக் காண்பது அரிது.

யாஅம் இரப்பவை

பொருளும் பொன்னும் போகமும் அல்ல, நின்பால் அருளும் அன்பும் அறனும் மூன்றும், . உருளினர்க் கடம்பின் ஒலிதா ரோயே! . என்ற பிரார்த்தனையை உலக முழுவதுமே முருகனிடம் விண்ணப்பித்துக் கொள்ளலாம். -

இந்த அரிய கருத்துக்களையுடைய பாடல், பரிபாட லென்னும் தொகை நூலில் ஐந்தாவது செய்யுளாக விளங்குகிறது. அந்தக் காலத்தில் இந்தப் பாட்டை இராகத்தோடு பாடினர்கள். பாலைப் பண்ணில் பாடினர். களென்று தெரிகிறது. இந்தப் பண்ணே அமைத்தவர். கண்ணன் நாகனர் என்ற புலவர்.

பாடல் முழுவதையும் இப்போது சேர்த்துப் பார்க்கலாம். . . :- ... ?