பக்கம்:பெர்னாட்ஷா வாழ்வும் பணியும்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



8

பெர்னார்ட்ஷாவின் வாழ்வும் பணியும்



கணவருடைய நடத்தையால், மனைவிக்கும் கெளரவம் இல்லாமல் போய்விட்டது.

எந்த வீட்டாரும், எந்த நிகழ்ச்சிக்கும் அவர்களை அழைப்பது இல்லை.

“தாயும் தந்தையும் சேர்ந்து எங்கேயாவது விருந்துக்குச் சென்றிருந்தால், அப்பொழுது, வீடு தீப்பற்றி எரிந்தாற்போல் எங்களுக்குத் திடுக்கிடக்கூடிய செய்தியாக இருந்திருக்கும்” என்று ஷா கூறுகிறார்.

தந்தைக்குக் கிடைத்த வருமானத்தைக் கொண்டு குடும்பத்தை நல்லபடியாக நடத்தி, மக்களைப் படிக்க வைத்திருக்க இயலும், ஆனால், குடிப்பழக்கம் இடையூறாக இருந்து, வருமானத்தை அழித்தது ஒரு பக்கம்; மற்றவர்களுக்கு இணையாக வாழவேண்டும் என்ற போலி மனப்பான்மையால் சிக்கனத்தைக் கடைப்பிடிக்காதது மற்றொரு பக்கம்; இதனால் குடும்பத்தில் பண நெருக்கடி முற்றியது.

இசையில் பயிற்சியும், திறமையும் ஷாவின் தாய்க்கு இருந்ததால், பிற்காலத்தில் குடும்பத்தைக் காப்பாற்ற அதுவே உதவியது.

அடுத்த தெருவில் வசித்து வந்த இசை ஆசிரியரின் உதவி குடும்பத்துக்குக் கிடைத்தது. அவர் திருமணம்