பக்கம்:பெர்னாட்ஷா வாழ்வும் பணியும்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



பெர்னார்ட்ஷாவின் வாழ்வும் பணியும்

9


ஆகாதவர். அவர் பெயர் லீ; ஷாவின் தாய் அவரிடம் இசைப் பயிற்சியை நன்றாக வளர்த்துக் கொண்டார். பிறகு ஷா குடும்பத்தினரும் அவரும் ஒரே வீட்டில் வசிக்க ஏற்பாடு செய்து கொண்டனர்.

இசை ஆசிரியரிடம் கற்றவை

இளமையிலேயே, இசை ஆசிரியரிடமிருந்து சில பழக்கங்களைக் கற்றுக்கொண்டார் ஷா,

இசை ஆசிரியர் லீ தன் வாழ்வில், இயற்கைக் காட்சிகளையும், இசையையுமே முக்கியமாகக் கருதிப் போற்றினார். அவை இரண்டும் ஷாவிடமும் அப்படியே படிந்துவிட்டன.

‘சன்னல்’ கதவுகளைத் திறந்த வைத்து விட்டே லீ உறங்குவார், ஷாவும் இறுதிவரை அவ்வாறே செய்து வந்தார்.

லீக்கு டாக்டர்களிடத்தில் நம்பிக்கை இல்லை. ஷாவின் உள்ளத்திலும் இது பதிந்தது.

இல்லம் சிறிது சிறிதாக இசையரங்காக மாறத் தொடங்கியது.

ஷா இளமையிலேயே இசைக்கலை பயின்றவர்.