பக்கம்:பெர்னாட்ஷா வாழ்வும் பணியும்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



10

பெர்னார்ட்ஷாவின் வாழ்வும் பணியும்



இசை ஒன்றே இளமையில் குடும்பச் சொத்தாக இருந்து வந்ததால், ஷா பிற்காலத்தில் இசைக்கலையில் ஆராய்ச்சி மிக்கவராகவும் விளங்கினார்.

தாயைப்போலவே மக்களும் இசையில் தேர்ச்சி பெற்றனர்.

தந்தை அலுவல் பார்த்து வந்த அலுவலகத்தில், ஆட்குறைப்பு காரணமாக, அவர் வேலையை இழக்க நேரிட்டது. ஆயினும், ஓய்வு ஊதியம் அவருக்குக் கிடைத்தது. அதைக் கொண்டு ஒருவரோடு கூட்டாக வியாபாரம் செய்யத் தொடங்கினார். அந்த வியாபாரத்தைச் சரிவரக் கவனிக்காததால், எப்படியோ அது நடந்து வந்தது. வியாபாரம் போராட்டத்தோடு நகர்ந்து கொண்டிருந்தது என்றே கூறவேண்டும்.

வறுமையில் வாடிய குடும்பம்

தந்தையின் இறுதி நாள் வரையில், அந்த வியாபாரத்தின் மூலம் சிறிய வருமானமே கிடைத்து வந்தது. பற்றாக்குறையால், குடும்பத்தில் வறுமை வாட்டியது. துன்பம் தாளாமல், தாய் லண்டன் நகரத்தை அடைந்தார்.

குடும்பம் இவ்வாறு பிரிந்த பிறகும், இயன்ற அளவு சிறுதொகையை தந்தை குடும்பத்துக்கு கொடுத்து வந்தார்.