பக்கம்:பெர்னாட்ஷா வாழ்வும் பணியும்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



பெர்னார்ட்ஷாவின் வாழ்வும் பணியும்

7



“அப்பொழுது ஷாவுக்கு திண்பண்டங்களும் பழச்சாறுகளும் நிறையக் கிடைக்கும். ஆனாலும் ஷாவுக்கு அதில் வெறுப்பு ஏற்படத் தொடங்கியது.

குடியின் தீமையைப் பற்றி தந்தை கூறியிருந்த அறிவுரைகளை நினைத்து, ‘அத்தகைய உணொஉ விடுதிகள் கெட்ட இடங்கள்’ என்று ஷா உணர்ந்தார்.

வேலைக்காரியுடன் சேரிகளுக்குச் சென்று கண்ட அனுபவத்தைப் பற்றி ஷா,

“என் வாழ்நாள் முழுவதும் நான் வறுமைக்கு விரோதமாக விளங்கியதற்கும், வறியவர்கள் இல்லாதபடியும், மறுபடியும் தோன்றாதவாறும் வழி வகுப்பதில், என் வாழ்நாள் முழுவதும் நான் தொண்டு செய்ய முற்பட்டதற்கும் காரணமான முதல் அனுபவமே இது தான்” என்று பிற்காலத்தில் குறிப்பிட்டார்

குடும்பத்தின் அலங்கோலம்

அக்கம் பக்கத்தாரோடு மதிப்பாகப் பழகுவதையும், உறவினர்களின் இல்லங்களுக்குச் சென்று அளவளாவு வதையும் ஷாவின் குடும்பம் இழந்துவிட்டது.

தந்தையின் குடிப்பழக்கமே எல்லோரும் அவரைப் புறக்கணிப்பதற்குக் காரணமாக இருந்தது.