பக்கம்:பெர்னாட்ஷா வாழ்வும் பணியும்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



6

பெர்னார்ட்ஷாவின் வாழ்வும் பணியும்



நாளடைவில், கணவரை விட்டுப் பிரிந்து வாழக்கூடிய நிலை அவருக்கு ஏற்பட்டது.

“தந்தை குடும்பக் கவலையே இல்லாதவர்; தாயோ யாரையும் கண்டித்து வளர்க்கும் சக்தியற்றவர். குடும்பத்தில் அன்போ, பகையோ, பயமோ, மதிப்போ இல்லை. குழந்தைகளை வழிகாட்டி வளர்க்கும் முயற்சியும் இல்லை. தாய் ஒரு பக்கம்; தந்தை ஒரு பக்கம், பிள்ளைகளாகிய நாங்களும் ஆளுக்கு ஒரு பக்கமாக வளர்ந்து வரலானோம்” என்று ஷா எழுதுகிறார்.

தீமையை உணர்ந்தார்

ஷா சிறுவனாக இருந்தபோது அவரை வெளி இடங்களுக்குக் கூட்டிக்கொண்டு போய், சுற்றிக் காண்பித்து வருமாறு வேலைக்காரியிடம் ஏற்பாடு செய்தனர். அவளோ பூங்காவுக்கோ, வாய்க்கால் கரைப்பகுதிக்கோ, செல்வந்தர் வாழும் பகுதிக்கோ அழைத்துச் செல்லாமல், தன் நண்பர்களைக் காண்பதற்கு, இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, ஏழைகள் வாழும் சேரிப்பகுதிகளுக்குச் சென்று பொழுதைக் கழித்தாள்; நண்பன் எவனாவது அவளை உணவு விடுதிக்கு அழைத்துச் செல்வதும் உண்டு.