பக்கம்:பெர்னாட்ஷா வாழ்வும் பணியும்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
ஷா பிறந்தார்


1856-ம் ஆண்டு ஜூலை மாதம் 26ம் தேதி அயர்லாந்து நாட்டின் தலைநகரமான டப்ளினில், ஜார்ஜ் பெர்னார்ட்ஷா பிறந்தார்.

ஷாவுக்கு முன் பிறந்தவர்கள் இரண்டு சகோதரிகள்.

ஷாவின் தந்தையின் பெயர் ஜார்ஜ் கார்ஷா என்பதாகும்.

ஷாவின் தந்தை அரசாங்க அலுவலில் இருந்தார், குடும்பப் பொறுப்பே இல்லாதவர்.

ஷாவின் தாய், நல்ல வாழ்க்கை வாழ ஆசையுடையவராக இருந்தார். அவருக்கு இசைக்கலையில் பயிற்சி இருந்தது. பொறாமை, பகைமை முதலியவை இல்லாதவர். எளிமையான தோற்றம் உள்ளவர். பண்பு மிக்கவர்.

என்றாலும், தம் கணவருடைய குடிப்பழக்கமும் பொறுப்பற்ற தன்மையும் அவருடைய நல்ல உள்ளத்தில் வெறுப்பை வளரச் செய்தது.