பக்கம்:பெர்னாட்ஷா வாழ்வும் பணியும்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



பொய்ப் பற்கள்


சீன நாட்டினர் ஒருவர் ஷாவை நேரில் கண்டு அவருடைய உடல் அமைப்பு ஒவ்வொன்றையும் பாராட்டத் தொடங்கினார்.

தம்முடைய பற்களை சீனர் கவனிப்பதைக் கண்ட ஷா “பல்லின் தோற்றம் எப்படி?” என்று கேட்டார்.

“மிகப் பாராட்டத்தக்கதாகவே இருக்கிறது” என்றார் அந்தச் சீனர்.

“அப்படியானால் அதை அருகில் வைத்தே பாருங்களேன்” என்று கூறி, தம் பற்களைக் கையில் எடுத்துக் கொடுத்தார் ஷா.

சீனர் பாராட்டிய பற்கள், பொய்ப்பற்கள் என்பதை இதைவிட நகைச்சுவையாக எப்படிக் கூற முடியும்?