பக்கம்:பெர்னாட்ஷா வாழ்வும் பணியும்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



12

பெர்னார்ட்ஷாவின் வாழ்வும் பணியும்



இரண்டும் கெட்டான் நிலை

சீரான உடை இல்லாமலும், தபால் செலவுக்கு என்ன செய்வது என்ற நிலையில் இருந்த ஷா சோர்வு அடைந்து விடவில்லை. அதைப்பற்றி.

“புகழுக்கும், இகழ்ச்சிக்கும், கவலைப்படாத ஒருவித தன்மை, அந்த நாள் முதல் எனக்குப் பயன் உள்ளதாக இருந்து வருகிறது. அதனால் புத்தக வெளியீட்டிலும் நாடக முறையிலும் அக்கறை குறைந்தவனாக இருந்து வந்தேன். அது வளர்ந்து சில சமயங்களில் எனக்கு இடையூறாகவும் இருந்தது. தொடர்ந்து எழுத்து வேலைகளைச் செய்வதற்கும் இயலாது என்று உணரும்படியும் செய்தது. அதனால், பிற்காலத்தில் எனக்குக் கிடைத்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளாமல், நெகிழவிடுவதும் ஒத்திவைப்பதுமாகத் தவறும் செய்திருக்கிறேன்.

லண்டனுக்குப் பயணம்

தாயும் சகோதரிகளும் லண்டனுக்குப் போய் வாழ முற்பட்டார்கள். ஷாவுக்கு அப்போது வயது பதினைந்து.

வறுமை காரணமாக, உயர்நிலைக் கல்வி கற்க வசதியின்றி ஷா வளர்ந்தார். ஆயினும் நுட்பமான அறிவு இருந்தமையால், ஆங்கில நூல்கள் பலவற்றை அப்போதே படித்திருந்தார்.