பக்கம்:பெர்னாட்ஷா வாழ்வும் பணியும்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



பெர்னார்ட்ஷாவின் வாழ்வும் பணியும்

13



கவிஞர் ஷெல்லி ஒருவரே, ஷாவின் உள்ளத்தைக் கவர்ந்தவராம்.

ஷாவுக்கு இளமையில் கல்வித் துறையில், வாய்ப்புக் குறைவாக இருந்தது போலவே, சமுதாய உறவுக்கு உரிய நவீனப் பழக்க வழக்கங்களுக்கும் வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது.

அவர் வளர்ந்த குடும்பமானது, சமுதாயத் தொடர்பற்ற குடும்பமாக இருந்ததே காரணம் போலும்!

உலகத்தை ஒட்டி, போலி நாகரிக மதிப்பைத் தேடி மற்றவர்களோடு இணைந்து நடக்க முடியாமல் ஷா வாழ்ந்ததற்கும் இதுவே காரணமாக அமைந்தது எனலாம். ஷா இளமையில், சமயத் துறையில் போதி அறிவு இல்லாமலேயே வளர்ந்தார்.

இளமையில் புலமை

ஷாவுக்கு பத்தாவது வயது தொடங்கும் முன்பே அவருடைய குடும்பத்தார் மாதா கோயிலுக்குப் போவதைக் கைவிட்டார்கள். பொறுப்பற்றவர்கள் நடத்தும் குடும்பத்தில், வறுமையும் புகுந்து வாழ்க்கைப் போராட்டத்தை வளர்த்தால், அங்கே எதை எதிர்ப்பார்க்க முடியும்?