பக்கம்:பெர்னாட்ஷா வாழ்வும் பணியும்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



14

பெர்னார்ட்ஷாவின் வாழ்வும் பணியும்



பத்தாவது வயதிலேயே சுயமாக வழிபாட்டு உரை இயற்றி வழிபடும் திறமை ஷாவுக்கு இருந்ததாம். பிற்காலத்தில் பெரும் அறிஞராக மொழிப்புலமை பெற்றுத் திகழ்ந்ததற்கு அது அறிகுறியாக இருந்தது.

கதைப் புத்தகங்களைப் படிப்பதில் ஷாவுக்கு சிறு வயதிலேயே மிகுந்த ஆர்வம் இருந்தது. ஒரு முறை சித்தியின் கிராமத்துக்குச் சென்றிருந்தபோது அங்கே ஆயிரத்தோரு இரவுகள் என்னும் அராபியக் கதைப் புத்தகத்தைக் கண்டார். தினமும் பொழுது விடிந்ததும், படுக்கையிலிருந்து எழுந்து உட்கார்ந்தபடியே, அந்தப் புத்தகத்தை எடுத்துப் படித்துக் கொண்டிருந்தார். சித்தி சாப்பிடக் கூப்பிடும் வரையிலும் கதையிலே மூழ்கியிருந்தார். ஒரு நாள் இதைக் கண்ட சித்தி, அந்தப் புத்தகத்தை எடுத்து ஒளித்து வைத்துவிட்டார். ஷா விடவில்லை. மறுபடியும் அதைத் தேடி எடுத்துப் படுக்கையின் அடியில் ஒளித்து வைத்துக்கொண்டார்.

கடன் வாங்கப் பயந்தார்

ஷாவின் வறுமை கொடியதாக இருந்தது. ஆனாலும், அவர் கடன் வாங்கிச் செலவு செய்யப் பயந்தார்.

ஒரு நண்பனிடம் ஐந்து பவுன் கடன் வாங்கி பின்னர், அதைத் திருப்பிக் கொடுக்க முடியாமல் போய்விட்டால் ஐந்து