பக்கம்:பெர்னாட்ஷா வாழ்வும் பணியும்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



பெர்னார்ட்ஷாவின் வாழ்வும் பணியும்

15


பவுனுக்காக அவனுடைய நட்பை விற்று, இழந்தது போலாகுமே என்றார் இந்த உணர்ச்சியானது ஷாவுக்கு இளமையிலேயே இருந்தது.

ஷாவின் பணக்கஷ்டத்தை அறிந்து, தாங்களாகவே கொடுக்க முன்வந்த நண்பர்களின் உதவியையும் அவர் பெற்றுக்கொள்ளாமல் இருந்து வந்தார்.

அவருக்கு வேலைத் தேடி தர நண்பர்கள் முன்வந்த போதும், அதை ஏற்க அவர் தயங்கினார்.

சில இடங்களில் வேலைக்காக முயன்றார். ஆனால் முயற்சியில் அக்கறை இல்லாமல் சோர்வோடுதான் முயன்றார்.

கணக்கர் வேலை பார்த்தார்

எப்படியோ அவர் ஏற்றுக்கொண்ட முதல் வேலை டப்ளின் நகரத்தில் ஒரு குறுநில மன்னரிடம் கணக்கர் வேலை. மாதம் பதினெட்டு ஷில்லிங் சம்பளம். பின்னர் படிப்படியாக அது முப்பது ஷில்லிங்காக உயர்ந்தது. அப்பொழுது தலைமைக் கணக்கர் இறந்து போனார். அந்த அலுவலுக்குத் திறமைமிக்க ஒருவர் தேவைப்பட்டது. ஷாவின் திறமையை உணர்ந்த முதலாளி, அவரையே அதற்கு நியமித்துவிட்டார்.