பக்கம்:பெர்னாட்ஷா வாழ்வும் பணியும்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



16

பெர்னார்ட்ஷாவின் வாழ்வும் பணியும்



தலைமைக் கணக்கர் அலுவலைச் செம்மையாகவும், நாணயமாகவும், கணக்கு முதலியவற்றை ஒழுங்காகவும் பார்த்துப் பொறுப்போடு நடந்து கொண்டார். முதலாளியின் மனதைக் கவர்ந்தார். ஆண்டுக்கு நாற்பத்து எட்டு பவுனாக சம்பளம் உயர்ந்தது. அந்தத் துறையிலே திறமையாகத் தான் திகழ நேர்ந்ததை எண்ணி, ஷாவே வியப்புற்றார். ஆயினும், அலுவலில் விருப்பம் கொள்ளவில்லை. ஒரு மாத முன் அறிவிப்புக் கொடுத்து வேலையை விட்டு விலகிவிட்டார்.

தந்தைக்கு இது விளங்கவில்லை. அந்த முதலாளியிடமிருந்து, மகனுக்காக ஒரு நற்சான்று வாங்கி வந்தார். தந்தையின் செயல், ஷாவுக்கு வருத்தத்தையும், கோபத்தையும் உண்டாக்கியது.

முதலாளியோ ஷாவை விட்டுவிட மனம் இல்லாமல் எவ்வளவோ முயன்றார். சம்பளத்தை உயர்த்தித் தருவதாகக் கூடக் கூறினார். ஷாவோ பிடிவாதமாக மறுத்துவிட்டார்.

ஷாவுக்குக் கிடைத்த கெளரவம்

இருபத்தைந்து உலகப் பிரமுகர்களின் பட்டியல் ஒன்றை மேல்நாட்டு ஆசிரியர் ஒருவர் தயாரித்து, பிரபலமான பத்திரிகை ஒன்றில் வெளியிட்டார்.

பெரும் பதவி வகித்தவர்; பெருந்தன்மை வாய்ந்தவர்; உலகிலேயே தைரியசாலியான ஆகாய விமானி; குபேரர்;