பக்கம்:பெர்னாட்ஷா வாழ்வும் பணியும்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



பெர்னார்ட்ஷாவின் வாழ்வும் பணியும்

17


அன்பு நிறைந்தவர்; சோகம் நிறைந்தவர்; நீதிமான், விகட நிபுணர் இப்படியாக பிரபலமானவர் பெயர்கள் வெளியிடப்பட்டன.

லண்டன் புறப்பட்டார்

பின்னர் சில நாட்கள் ஓய்வு எடுத்துக் கொண்டு லண்டனுக்குத் தாயிடம் போய்ச் சேர்ந்தார்.

தமக்கு இசை கற்றுத் தருமாறு தாயிடம் கேட்டுக் கொண்டார்.

தாயிடம் இசை பயிலும்போது, அரைகுறையாகவும் தவறாகவும் பாடிய இசைப் பகுதிகள் தாயின் உள்ளத்தைப் புண்படுத்தின. ஆனால் தம்முடைய வருத்தத்தைத் தம் மகனிடம் அவர் காட்டிக் கொள்ளவில்லை, பிற்காலத்தில் தாய் உண்மையைக் கூறினாராம்.

அப்பொழுது, ஷா தவறாகப் பாடிய பாடல்களைக் கேட்டதும் தாய் எழுந்து தனியே சென்று சிறிது நேரம் அழுதுவிட்டு ஆறுதல் அடைந்து திரும்ப வேண்டும் என்று அந்தத் தாயின் கலை உள்ளத்துக்குத் தோன்றியதாம்.

சிறந்த கலை உள்ளத்துக்கு இவ்வாறு வருத்தத்தை உண்டாக்கி வந்ததை எண்ணி பிற்காலத்தில் ஷா தம்மை நொந்து கொண்டிருக்கிறார்.


2