பக்கம்:பெர்னாட்ஷா வாழ்வும் பணியும்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



18

பெர்னார்ட்ஷாவின் வாழ்வும் பணியும்



இசையில் தேர்ச்சி

பின்னர், இசைக்கலையில் தேர்ச்சி பெற்றுவிட்டார் ஷா!

தம் தாயின் ஆசிரியர் லீ நடத்திய இசையரங்குகளில் ஷா திறமையாகப் பியானோ இசைத்து வந்திருக்கிறார்.

ஒரு பத்திரிகையில் இசைப்பகுதிக்கு மதிப்புரை எழுதும் வாய்ப்பு இசை ஆசிரியர் லீக்குக் கிடைத்தது. அதை அவர் ஷாவின் மூலம் நிறைவேற்றி, அதற்குக் கிடைத்த சன்மானத்தையும் ஷாவையே பெற்றுக்கொள்ளச் செய்தார்.

ஆனால், ஷா எழுதிய இசை விமர்சனங்கள், இசைத் துறையில் உள்ளவர்களுக்குப் பிடிக்காததால், அப்பத்திரிகை, பலருடைய வெறுப்புக்கு ஆளாகி நின்று போயிற்று.

ஷா லண்டனுக்கு வந்த பிறகும் இரண்டு ஆண்டுகள் வரை, பயனுள்ள ஒரு தொழிலும் செய்யாமல் காலம் கழித்தார்.

உழைப்பே மூலகாரணம்

அவருக்கு இருந்த சூழ்நிலையும் சுபாவமும் வேறு ஒருவருக்கு இருந்தால், வாழ்க்கையில் எந்த வகையாலும் அவர் முன்னேறியிருக்க முடியாது.

அந்தச் சூழ்நிலையும் பண்பும் இருந்த போதிலும், அவரிடம் இருந்த அறிவுத் திறனும் உழைக்கும் ஆற்றலுமே அவர் முன்னேறியதற்கு முக்கிய காரணமாகும்.