பக்கம்:பெர்னாட்ஷா வாழ்வும் பணியும்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



பெர்னார்ட்ஷாவின் வாழ்வும் பணியும்

19



கண்டதை எல்லாம் திணித்து வைத்துக்கொள்ளும் நினைவாற்றலும் அவருக்கு இல்லை; தேவையானதைக் கொள்வதும், மற்றவற்றைத் தள்ளிவிடுவதுமே அவருடைய மூளையின் இயல்பாகும்.

எந்தப் போட்டித் திட்டத்திலும் ஷா கலந்து கொள்ள ஆசைப்பட்டதில்லை.

பரிசுகளும் பாராட்டுகளும் பெறவேண்டும் என்ற ஆவலும் அவருக்கு ஏற்பட்டதே இல்லை.

“போட்டித் தேர்வுகளில் நான் கலந்து வெற்றி பெற்றாலும், தோற்றவர்களின் ஏமாற்றத்தைக் கருதி வருந்துவேன் நான் தோற்றுவிட்டாலோ என் கெளரவம் இழந்ததாக வருந்துவேன். பரிசு, பதக்கம் ஆகியவற்றால் என் மதிப்புச் சிறிது அளவாவது உயரும் என்று நான் நம்பவில்லை" என்று ஷா எழுதுகிறார்.

“நான் படித்த பள்ளிக்கூடத்தில் எதையும் கற்றுக் கொள்ள இயலவில்லை”, எனக் குறிப்பிடுகிறார் ஷா.

படிப்பதும் எழுதுவதும்

இயற்கையான கல்வியில் ஷாவுக்கு இருந்த ஆர்வம், லண்டனுக்கு வந்த பிறகு உரிய வாய்ப்பாக அமைந்தது.