பக்கம்:பெர்னாட்ஷா வாழ்வும் பணியும்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



பெர்னார்ட்ஷாவின் வாழ்வும் பணியும்

21



கிழிந்த பூட்சுகளைப் போட்டுக் கொண்டிருக்கிறார். சட்டையின் கை ஒரம் கிழிந்து கந்தலாகியதைக் கத்தரித்து, வெளியே தெரியாமல் சாமர்த்தியமாக அணிந்து கொண்டிருக்கிறார்.

தொப்பியோ பல ஆண்டுகளாக கையாளப்பட்ட பழம்பொருளாக இருந்ததால் முன்பின்னாக அதை மாற்றி அணிந்து கொண்டிருக்கிறார்.

ஆனாலும், வாழ்க்கைப் போராட்டத்தில் அவர் ஈடுபடவில்லை. ஆயினும், தாயை ஈடுபடச் செய்துவிட்டு, அவர் ஒதுங்கியே இருந்திருக்கிறார். தந்தைக்கும் அவர் உதவவில்லை.

குடும்பத்தில் அப்பொழுது இருந்த வறுமையோ விவரிக்க முடியாதது. அதனால், அவருடைய உதவியை குடும்பத்தில் எதிர்பார்க்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனால், அவருடைய ஏழைத் தாய் இளமையில் தாம் ஆசையோடு கற்றுக்கொண்ட இசைக்கலையை விற்று ஷாவின் செலவுக்குக் கொடுத்திருக்கிறார்.

தாயிடம் பணம் வாங்கிச் செலவு செய்துகொண்டிருந்த ஷாவை ‘மனித இதயம் இல்லாதவன்’ என்று நிந்தித்தவர்கள் பலர்.

“எப்படியோ நாள்தோறம் தவறாமல் எழுதிவந்த பழக்கத்தால், எவருக்கும் அடிமையாகாமல் தப்பித்தேன்.