பக்கம்:பெர்னாட்ஷா வாழ்வும் பணியும்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



22

பெர்னார்ட்ஷாவின் வாழ்வும் பணியும்


தாயின் உழைப்பால் கிடைத்த பணத்தால் வாழ்ந்து வளர்ந்து, என்னை மனிதனாக ஆக்கிக்கொண்டேன்” என்று கூறுகிறார்.

ஒன்பது ஆண்டுகள்,1876 முதல் 1885 வரை, லண்டன் தெருக்களில் ஷா அலைந்து திரிந்து கொண்டிருந்த காலத்தில் அவருடைய வறுமை மிகவும் கொடுமையாக இருந்தது.

ஒரே உடையையே எல்லாக் காலங்களிலும் அணிந்து செல்லவேண்டிய நிலையில் இருந்தார்.

பகலில் அடிக்கடி வெளியில் செல்வதற்குக்கூட உடை இல்லாமல் இருந்தார்; அடுத்த நிறுவனத்துக்கு அனுப்புவதற்கு ஆறு பென்ஸ் தபால் செலவுக்கு இல்லாமல் ஏங்கியுள்ளார். ஆனால், அதற்காக அவர் சோர்ந்து விடவில்லை.

எதிர்ப்பைக் கண்டு அஞ்சவில்லை

ஷா எழுதிய நாவல்களுக்கு மறுப்புகள் உண்டான போதிலும்கூட எழுதுவதை மட்டும் அவர் நிறுத்தவே இல்லை.

பத்திரிகை உலகில் எழுதும் வாய்ப்புக் கிடைத்தபோது, நாவல்கள் எழுதுவதை விட்டுவிட்டு, நாடகங்கள் எழுதத் தொடங்கினார்.