பக்கம்:பெர்னாட்ஷா வாழ்வும் பணியும்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



பெர்னார்ட்ஷாவின் வாழ்வும் பணியும்

23



ஒரு பத்திரிகையில் ஓவிய விமரிசனம், மற்றொன்றில் மதிப்புரை எழுதும் வாய்ப்பு, இன்னொன்றில் இசையும் கலையும் பற்றி எழுதும் பொறுப்பு கிடைத்தன.

புனை பெயரால் ‘ஸ்டார்’ என்ற இதழுக்கு இசையைப் பற்றி பல கட்டுரைகள் எழுதினார்.

இவ்வாறு மெல்ல மெல்ல ஷா எழுத்தாளர் உலகில் தகுந்த இடத்தைப் பெறலானார்.

ஓரளவு பெயர் உண்டானபின், லண்டனில் உள்ள இரண்டு சிறந்த பத்திரிகை நிலையங்கள் அவரை அழைத்தன. அவரோ மறுத்துவிட்டார். அதற்குக் காரணம் கூறுகிறார்:

“முதலாவதாக, ஆசிரியரின் நண்பர்களான மற்றவர்கள் பெயர் பெறுவதற்காக நான் கட்டுரைகளும், குறிப்புகளும் எழுதித் தருவது எனக்குப் பிடிக்கவில்லை, இரண்டாவதாக, என் பெயரால் நான் எழுதும் கட்டுரைகளில் பத்திரிகை ஆசிரியரின் மனைவி தன் மனப்போக்குக்கு ஏற்றபடி, கலைஞர்களைப் பற்றி தவறான கருத்துக்கள் இடம்பெறும் வகையில் தம் குறிப்புக்களை இடையிடையே சேர்ப்பதை என்னால் பொறுத்துக்கொள்ள இயலவில்லை என்று கூறுகிறார்.

பத்து ஆண்டுகள் தொடாந்து நாடக அரங்குகளைப் பற்றி மதிப்புரை எழுதி வந்தார்.