பக்கம்:பெர்னாட்ஷா வாழ்வும் பணியும்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



24

பெர்னார்ட்ஷாவின் வாழ்வும் பணியும்



ஷாவுக்கு 1898ல், பாதத்தில் ஒரு கட்டி கிளம்பி, இருமுறை அறுவை சிகிச்சை செய்துகொள்ள நேரிட்டது. அப்போது எல்லா வேலைகளையும் அவர் நிறுத்திவிட்டார்.

அப்போது வருமானம் நல்ல ിക്കി இருந்ததால் மதிப்புரையாளராக பத்திரிகைகளுக்கு அடிமைப்பட்டு எழுதும் தொல்லையை விட்டுவிட்டார்.

“இனி இந்த வேலையில் ஈடுபடுவதில்லை என்று உறுதி பூண்டேன். இனி, இதற்காக நாடக அரங்கத்திற்குள் நுழைய மாட்டேன். இந்தத் துறை இதோடு போதும். நானும் சலித்துபோய் களைப்படைந்துவிட்டேன்”என்று அறிவித்தார்.

அவருக்குக் கிடைத்த வருமான்ம் ஒன்பது ஆண்டுகளுக்கு ஐந்தே பவுன்!

வருமானம் வரத் தொடங்கியது

எழுத்தாளராக நல்ல வருமானம் பெறத் தொடங்கியது 1885ம் ஆண்டு முதல் எனலாம். அந்த ஆண்டில் மட்டும் அவருக்குக் கிடைத்த வருமானம் 112 பவுன்!

அதன் பின்னர், 1914-1915ல் உலகப் போர் நிகழ்ந்த சமயம், பணத்தொல்லை இல்லாமல் வாழத் தொடங்கினார், போர் முடிந்த பின்னர், வருமானம் பெருகியது. வறுமையின் கொடுமை அறவே விலகி, செல்வமும் சேர்ந்தது.