பக்கம்:பெர்னாட்ஷா வாழ்வும் பணியும்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



பெர்னார்ட்ஷாவின் வாழ்வும் பணியும்

25



ஷாவின் முதல் நாடகம், மனைவி இழந்தவரின் வீடு' என்பதாகும். இது 1890ம் ஆண்டு வெளியாயிற்று. 1892ல் அது நடிக்கப் பெற்றது. ஆனால் வெற்றிபெறவில்லை.

அதே ஆண்டில் திருமதி வாரனின் தொழில் என்ற அடுத்த நாடகம் வெளிவந்தது. ஆனால், அதை நடிக்கக் கூடாது என இங்கிலாந்தில் தடை விதித்தனர். அமெரிக்காவில் அதைப் படித்தவர்களின் மீது வழக்கு தொடரப்பட்டது.

வெற்றி அளித்த நாடகம்

நாடக மேடையில் ஷாவுக்கு முதன் முதலாக வெற்றித் தேடித்தந்த நாடகம் 1894ல் எழுதி வெளிவந்த காண்டிடா என்பதாகும். அந்த வெற்றி கிடைத்தது ஜெர்மனியில்.

அதன் பின்னர், ஷாவை அமெரிக்கா போற்றத் தொடங்கியது.

“மனிதனும் உயர்ந்த மனிதனும்” மேடைக்கு வந்த பிறகே, இங்கிலாந்திலும் அவர் வெற்றி கண்டார்.

இயற்கையாகவே, ஷாவின் உடல் உறுதியானது. அதனால், ஏதாவது ஒரு துறையில் உழைக்க வேண்டும் என்ற உந்துதல் இருந்து வந்தது. அதற்காக, ஒரு ‘பட்டிமன்றத்தில்’ உறுப்பினர் ஆனார்.